Please Visite here - www.cenimagallary.blogspot.com

Saturday, May 16, 2009

Sonyக்கு வந்த பரிதாப நிலை

உலக பொருளாதாரப் பின்னடைவு – அமெரிக்க சனாதிபதித் தேர்தல் சமயத்தில் சக்கை போடு போட்ட விவகாரம். இப்போது அதனால் நேரடியாகப் பாதிக்கப்பட்டேரைத் தவிர யாரும் பேசுவதே கிடையாது.





அமெரிக்காவில் வீடு, நிலங்களின் மதிப்பு உயர்வாயிருந்த காலம். பெரும்பாலானோர் அவற்றிலே முதலிடத் தொடங்க, வங்கிகளும் அவர்களுக்கு கேட்டுக் கேள்வி இல்லாமல் கடனைக் கொடுத்தன. பின் வீடு நிலங்களின் பெறுமதி குறையத்தொடங்கியபோதே பிரச்சினை ஆரம்பமாகியது. கடன் பெற்றவர்கள் அதைத் திருப்பிக்கொடுக்க முடியாது திணற, அமெரிக்க வங்கிகளும் திவாலாகத் தொடங்கின. இவ்வாறு தொடங்கிய பிரச்சினை பலருடைய வேலையைப் பறித்து, பல நிறுவனங்களை இழுத்து மூட வைத்தது. ஏன்? பெட்டிக் கடைமுதல், பெரிய நிறுவனங்கள்வரை இதன் பாதிப்புக்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அனைத்தையும் பாதித்தது.

ஆகா, ஓகோ எனப் புகழப்பட்ட IT துறையும், இலத்திரனியல் துறையும் அதல பாதாளத்திற்குள் வீழ்ந்தன. அதன் தாக்கத்தை தமது இலாப(?) நட்டங்களை கூட்டிக் கழித்துப் பார்த்து வெளியிட்டு வருகின்றன அத்துறைகளில் பிஸ்தாவான நிறுவனங்கள்.

உலகின் முன்னணி இலத்திரனியல் நிறுவனமான SONY கடந்த 14 வருடங்களில் தனது முதலாவது வருடாந்த நட்டத்தை அறிவித்துள்ளது. 1.7 பில்லியன் அமரிக்க டாலர் நட்டத்தை அது அடைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த ஆண்டு அதைவிட அதிக நட்டத்தை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் அது தனது எட்டு தொழிற்சாலைகளை மூடப்போவதாகவும், மேலும் எண்ணாயிரம் பேரை வேலையைவிட்டுத் தூக்கப்போவதாகவும் கூறியுள்ளது.







SONY மட்டுமல்ல, Hitachi, NEC Corp ஆகிய இலத்திரனியல் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் நிலை இதைவிட மோசம் எனக் கூறப்படுகிறது. Hitachi யின் நட்டம் அதிகமல்ல, வெறும் 7.9 பில்லியன் அமரிக்க டாலர் மட்டுமே. NEC நிறுவனம் 3 பில்லியன் அமரிக்க டாலர் நட்டத்தை பெற்று இரண்டாமிடம் வகிக்கின்றது.

வருகின்ற செய்திகளைப்பார்த்தால் ஒரு ஒபாமா என்ன, ஓராயிரம் ஒபாமா வந்தாலும் உலகத்தைக் காப்பாற்ற முடியாது.

No comments:

Post a Comment