Please Visite here - www.cenimagallary.blogspot.com

Thursday, May 7, 2009

மணிரத்னம், ஷங்கர் மாதிரி வர விருப்பமில்லை!-அமீர்

இயக்குநர்கள் மணி ரத்னம், ஷங்கர் மாதிரி இருங்கன்னு நிறையப் பேர் சொல்றாங்க. நான் அப்படியெல்லாம் ஆக விரும்பல. நான் நானாகவே இருக்க ஆசைப்படுகிறேன், என்றார் இயக்குநர் அமீர்.

எஸ் எம் ராஜூ தயாரித்து இயக்கியுள்ள வர்ணம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை சத்யம் வளாகத்தில் நடந்தது. முதல் சிடியை இயக்குநர் பாலுமகேந்திரா வெளியிட, டைரக்டர் அமீர் பெற்றுக்கொண்டார்.

விழாவில் அமீர் பேசியதாவது:

நான் இந்த தியேட்டருக்குள்ள நுழையும்போதே நம்ம பத்திரிகை நண்பர்கள் என்னைப் பார்த்துச் சிரிச்சாங்க. அதுக்கு அர்த்தம் தெரியும். என்னய்யா எந்த விழாவா இருந்தாலும் வந்துடறானேன்னு நினைக்கிறாங்கன்னு எனக்கும் தெரியும்.

சில நண்பர்கள் என்னிடம், 'மணிரத்னம், ஷங்கர் போன்ற பெரிய இயக்குநர்கள் விழாக்களில் கலந்துகொள்வதில்லை. அதுமாதிரி நீங்களும் இருங்கண்ணே' என்றார்கள்.

மணிரத்னம், ஷங்கர் மாதிரி வர எனக்கு ஆசை இல்லை. அதுக்குதான் அவங்க இருக்காங்களே... நான் எதுக்கு காப்பியடிக்கணும். நான் அமீராவே இருக்க ஆசைப்படறேன்.

எம்.ஜி.ஆர்-சிவாஜி ஆகிய இருவருக்கும் முன்னோடிகள் தியாகராஜ பாகவதரும், பி.யு.சின்னப்பாவும். ரஜினிகாந்த்-கமலஹாசன் ஆகிய இருவருக்கும் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் முன்னோடியாக இருந்தார்கள். இன்றைய இளைய தலைமுறை நடிகர்களுக்கு ரஜினி-கமல் முன்னோடிகளாக இருக்கிறார்கள்.

எங்களை மாதிரி இயக்குநர்களுக்கு பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா போன்றவர்கள் முன்னோடிகளாக இருக்கிறார்கள்.

இந்த மாதிரி விழாக்களுக்கு மதித்து கூப்பிடுகிறார்கள் என்றால் என்ன காரணம்... அவர்கள் நம்மீது வைத்திருக்கும் அன்பு. இன்னொன்னு கூப்பிட்டா, மதிச்சி வர்றாங்கப்பா என்ற எண்ணம். இந்த சினிமாவுல இதை சம்பாதிச்சு வெச்சிருக்கிறது எவ்வளவு பெரிய விஷயம் பாருங்க... இன்னொன்னு இந்த மாதிரி விழாக்களில்தான் பெரிய ஜாம்பவான்களைச் சந்திக்க முடியும். உதாரணத்துக்கு, மது அம்பாட் என்ற சிறந்த ஒளிப்பதிவாளரை நான் இந்த நிகழ்ச்சியில்தான் நேரிலேயே பார்த்தேன்..." என்றார் அமீர்.

வர்ணம் திரைப்பட பாடல்களை வெகுவாகப் பாராட்டிய அமீர், இப்போது நல்ல கதைகள் இருந்தால், சூப்பர் ஸ்டார்கள் இல்லாவிட்டாலும் நல்ல வசூல் கிடைக்கும் என்றார்.

இயக்குநர் பாலு மகேந்திரா பேசும்போது, வர்ணம் படப் பாடல்கள் தனது அழியாத கோலங்கள் பட நினைவுகளைக் கிளறிவிட்டதாகக் கூறினார்.

இயக்குநர்கள் எம்.சசிகுமார், சமுத்திரக்கனி, வெங்கட்பிரபு, கவிஞர் நா.முத்துகுமார், நடிகர் சம்பத், நடிகை மோனிகா, ஒளிப்பதிவாளர் மதுஅம்பாட், இசையமைப்பாளர் ஐசக்தாமஸ் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டார்கள்.

'வர்ணம்' படத்தின் இயக்குநர் எஸ்.எம்.ராஜு நன்றி கூறினார்.

No comments:

Post a Comment