Sunday, May 24, 2009
தெ.ஆப்பிரிக்காவின் ட்யூன் கோஸட்ஸ் மிஸ் ஐபிஎல் அழகியாக தேர்வு
ஜோஹன்னஸ்பர்க்: கிழக்கு லண்டனைச் சேர்ந்த 35 வயது மாடல் அழகியான ட்யூன் கோஸட்ஸ், மிஸ் பாலிவுட் ஐபிஎல் தென் ஆப்பிரிக்கா பட்டத்தை வென்றுள்ளார்.
ஜோஹன்னஸ்பர்க்கில் ஞாயிற்றுக்கிழமை காலை, மான்டி காசினோ என்டர்டெய்ன்மென்ட் வளாகத்தில் நடந்த வண்ணமிகு நிகழ்ச்சியில் அவருக்கு இந்த பட்டம் சூட்டப்பட்டது.
ஒவ்வொரு ஐபிஎல் போட்டியின் இறுதியிலும் ஒரு அழகி தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார். மொத்தம் 48 அழகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் ஒருவரை மிஸ் பாலிவுட் ஐபிஎல் தென் ஆப்பிரிக்கா பட்டத்திற்கு இணையதள வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்தனர்.
அதில் ட்யூன் கோஸட்ஸ் வெற்றி பெற்றார். இவருக்கு ஷாருக் கானுடன் நடிக்கும் வாய்ப்பு வழங்கப்படும். இதுதவிர மேலும் பல பரிசுகளும் வழங்கப்படும்.
இந்த வித்தியாசமான போட்டி தென் ஆப்பிரிக்காவில் ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
ஜோஹன்னஸ்பர்க்கைச் சேர்ந்த பட்டதாரிப் பெண் ஜென்னா கிளவுட் (24 வயது) 2வது இடத்தைப் பெற்றார். இவருக்கு முதல் இளவரசி என்ற கூடுதல் பட்டமும் கிடைத்தது. 2வது இளவரசியாக டுடனே நோரே தேர்வானார்.
இதுவரை ஒரு பாலிவுட் படம் கூட பார்த்ததில்லையாம் ட்யூன். இருப்பினும் உடனே போய் பாலிவுட் படங்களைப் பார்க்க வேண்டும் என ஆவலாக இருப்பதாக கூறியுள்ளார். மேலும் இந்தி கற்கவும் போகிறாராம்.
இந்தப் போட்டியில் நிறைய இந்தியப் போட்டியாளர்களும் இருந்தனர். ஆனால் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மூன்று பேர்தான் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியில் வெற்றி பெற்ற ட்யூனுக்கு தங்கம், வெள்ளி, வைர நகைள், அரிய வகை கற்கள் உள்ளிட்டவை பரிசாகக் கிடைத்தன.
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் அழகி மிஷல் மெக்லீன் இந்தப் பரிசுகளை வழங்கினார்.
முன்னதாக மெக்லீன் பங்கேற்ற நடன நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஐபிஎல் கமிஷனர் லலித் மோடியும் கலந்து கொண்டு ஆடினார்.
ஐபிஎல் 2வது சீசன் போட்டிகள் இன்றுடன் நிறைவுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment