“கண்களால் கைது செய்” படம் மூலம் கதாநாயகியாக அறிமுக மான பிரியாமணி தமிழ், தெலுங்கில் 24 படங்களில் நடித்து விட்டார்.
“பருத்திவீரன்” படம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்று தந்ததால் இந்தியா முழுவதும் பிரபலமானார். “மலைக்கோட்டை”, “தோட்டா” போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இவ்விரு படங்களின் ஹீரோக்கள் விஷால், ஜீவன் ஆகியோருடன் இணைத்து ஏற்கனவே கிசுகிசு வெளியானது.
பின்னர் பிருதிவிராஜை காதலிப்பதாகவும் செய்தி அடிபட்டது. இதை பிரியாமணி மறுத்தார்.
தற்போது தெலுங்கு நடிகர் தருணை பிரியாமணி தீவிரமாக காதலிப்பதாக செய்தி பரவியுள்ளது. இருவரும் “நவ வசந்தம்” என்ற படத்தில் நடித்த போதே நெருக்கமானதாக கூறப்படுகிறது. ஆனால் காதலை மறைத்து வந்துள்ளனர். நீண்ட நாட்களாக நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ரகசியமாக சந்தித்து காதலை வளர்த்தார்களாம். இப்போது அது வெளியே கசிந்துள்ளது. காதல் பரிசாக பிரியாமணிக்கு, தருண் புதிய சொகுசு கார் வாங்கி கொடுத்துள்ளார். காதல் விவகாரம் தருண் தாயார் ரோஜாரமணிக்கு தெரிய வந்திருப்பதாகவும் அவரும் சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும் நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். கைவசம் உள்ள படங்களை முடித்ததும் இருவருக்கும் திருமணம் நடக்கும் என்கிறார்கள்.
ஏற்கனவே நடிகை ஆர்த்தி அகர்வாலை காதலித்து தருண் கை விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார்.
No comments:
Post a Comment