சேது பட நாயகி அபிதாவுக்கு கல்யாணம் நிச்சயமாகியுள்ளது. மே 25ம் தேதி கோட்டயத்தில் கல்யாணம் நடைபெறுகிறது.மலையாளத்தில் தேவதாசி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் அபிதா. சேது படத்தின் மூலம் அவரை தமிழுக்கு கூட்டி வந்தார் பாலா. அப்படத்தில் அவருக்கு நிறைய நல்ல பெயர் கிடைத்தது. ஆனால் அந்த நேரம் பார்த்து தேவதாசி படத்தை தமிழில் டப் செய்து வெளியிடவே, அபிதாவின் மார்க்கெட் சரிந்தது.இருப்பினும் டிவி சீரியல்கள் அவருக்கு கை கொடுத்தன. தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார் அபிதா. திருமதி செல்வம், தங்கமான புருஷன் ஆகிய தொடர்களில் அவர் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், அபிதாவுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. அவரை மணக்கப் போகும் மாப்பிள்ளையின் பெயர் டி.ஜார்ஜ். கேரளாவைச் சேர்ந்தவர். கோட்டயத்தில் ஒரு கெமிக்கல் கம்பெனியில், தலைமைக் கணக்காளராக இருக்கிறார்.இவர்களது திருமணம் பெற்றோரால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட ஒன்று. வருகிற 25ம் தேதி கோட்டயம், பசிராவில் உள்ள செயின்ட் மேரீஸ் கத்தோலிக்க சர்ச்சில் நடைபெறுகிறது.திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து டிவி சீரியல்களில் நடிப்பாராம் அபிதா.
No comments:
Post a Comment