Please Visite here - www.cenimagallary.blogspot.com

Wednesday, May 20, 2009

ஆஷஸ் தொடரில் சைமண்ட்ஸ் இல்லை

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடருக்கான ஆஸ்ட்ரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சைமண்ட்சிற்கும், ஷேன் வார்சனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இந்த போட்டியில் ஷேன் வாட்சன் வெற்றி பெற்று அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சைமண்ட்ஸ் தேர்வு செய்யப்படவில்லை.

ஆல்ரவுண்டரான மெக்டொனால்டிற்கு பதிலாக சைமண்ட்ஸ் சேர்க்கபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வாட்சன், மெக்டொனால்ட் என்று இருவரையுமே ஆஸ்ட்ரேலிய தேர்வுக் குழு தேர்வு செய்துள்ளது.

இதனால் அடுத்த மாதம் 34 வயது நிரம்பவுள்ள சைமண்ட்சின் டெஸ்ட் கிரிக்கெட் எதிர்காலம் முடிந்துவிட்டது என்று ஆஸ்ட்ரேலிய ஊடகங்கள் ஊகம் வெளியிட்டுள்ளன.

ஆஸ்ட்ரேலிய அணி: ரிக்கி பாண்டிங், மைக்கேல் கிளார்க், பிராட் ஹேடின், ஸ்டூவர்ட் கிளார்க், நேதன் ஹாரிட்ஸ், பென் ஹில்ஃபென் ஹாஸ், பிலிப் ஹியூஸ், மைக்கேல் ஹஸ்ஸி, மிட்செல் ஜான்சன், சைமன் கேடிச், பிரட் லீ, மெக்டொனால்ட், கிராகம் மனூ, மார்கஸ் நார்த், பீட்டர் சிடில், ஷேன் வாட்சன்.

No comments:

Post a Comment