'அழகி' மோனிகா கன்னடத்தில் புதுப் படத்தில் புக் ஆகியுள்ளார். இப்படத்தில் மீரா ஜாஸ்மினும் இருக்கிறார்.
சின்னப் பெண்ணாக இருந்தது முதல் நடித்துக் கொண்டிருக்கிறார் மோனிகா. ஹீரோயினாக அவர் விஸ்வரூபம் காட்டியது சிலந்தி படத்தில்தான். ஆனால் அத்தனை கவர்ச்சி[^] காட்டியும் கூட தமிழில் அவருக்கு கை நிறையப் படங்கள் வரவில்லை.
ஆனால் கன்னடத்தில் இவரை ஹீரோயினாகப் போட்டு ஒரு படம்[^] தயாரிக்கிறார்கள். கன்னடத்து சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார்தான் இப்படத்தின் நாயகன்.
தேவரு கொட்ட தங்கி (கடவுள் கொடுத்த தங்கச்சி) என்பதுதான் படத்தின் பெயர். ஓம் சாய் பிரகாஷ் இயக்குகிறார். சிவராஜ் குமாருக்கு ஜோடியாக நடிக்கிறார் மோனிகா.
சிவராஜ் குமாரின் தங்கை வேடத்தில் நடிக்கிறார் மீரா ஜாஸ்மின். படத்தில் மோனிகாதான் நாயகி என்றாலும் கூட கதைப்படி மீராவுக்கும் வெயிட்டான பாத்திரமாம். இதனால்தான் தான் நாயகி இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை என்று ஒத்துக் கொண்டாராம் மீரா.
ஏற்கனவே சண்டக் கோழி படத்தில் மீராவும், மோனிகாவும் இணைந்து நடித்துள்ளனர். அப்படத்தில் மோனிகாவுக்கு தம்மாத்தூண்டு பாத்திரம். இப்போது கன்னடத்தில் மோனிகா நாயகியாக நடிக்கும் படத்தில் 2வது ரோலில் நடிக்கிறார் மீரா.
Tags: cinema, tamil, kannadam, mo
No comments:
Post a Comment