சூப்பர் டென் காமெடி நிகழ்ச்சியின் மூலம் பெரும் புகழ் பெற்றவர் ஆர்த்தி. குண்டு ஆர்த்தி என்ற செல்லப் பெயரும் உண்டு. அதே நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் கணேஷ்.
இப்போது இருவரும் சேர்ந்து கலைஞர் டிவியில் காமெடி நிகழ்ச்சிளை அளித்து வருகின்றனர். குழந்தைகளுக்கான நிகழ்ச்சி ஒன்றையும் வழங்கி வருகின்றனர்.
ஆர்த்தி பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் திடீரென ஆர்த்தியும், கணேஷும் பிரசாரத்தில் குதித்துள்ளனர்.
திருவள்ளூர் தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் காயத்ரி ஸ்ரீதரனை ஆதரித்து, பென்னலூர்ப்பேட்டை பகுதியில் பிரசாரம் செய்து உதயசூரியனுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
No comments:
Post a Comment