Please Visite here - www.cenimagallary.blogspot.com

Thursday, May 28, 2009

ரஜினியுடன் முதல்முறை இணையும் கலாபவன் மணி!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் எந்திரன்- தி ரோபோ படத்தில் நடிக்கிறார் நடிகர் கலாபவன் மணி.

ரஜினி படத்தில் அவர் நடிப்பது இதுவே முதல் முறை.

வில்லன் நடிப்பில் தனி முத்திரை பதித்தவரான கலாபவன் மணி, இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கவில்லை... நகைச்சுவை கலந்த குணச்சித்திர வேடம் ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கலாபவன் மணி கூறியதாவது:

நமக்கு மொழி பேதம் கிடையாது. தென் மாநில மொழிப் படங்கள் அனைத்திலும் நடிக்கிறேன். சந்தோஷமாக இருக்கிறது. மலையாளத்தில் மீண்டும் கதாநாயகனாகிவிட்டேன்.

தெலுங்கில் 6 படங்கள் பண்ணுகிறேன். விரைவில் கன்னடம் படமும் நடிக்கப் போகிறேன்.

தமிழ்ப் படங்கள் என்றால் எனக்கு மிகவும் இஷ்டம். காரணம் எனக்கு பெரிய அங்கீகாரம், அதைவிட பெரிய அளவு சம்பளம் கொடுத்து கவுரவித்தது தமிழ்ப்பட உலகம்தான்.

இப்போதும் சரித்திரம், மோதி விளையாடு போன்ற படங்களில் நடித்துக் கொண்டுள்ளேன்.

இதுவரை ரஜினி சார் படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. தற்போது தமிழில் அவருடைய எந்திரன் படத்தில் நடிக்கிறேன். இந்த படத்தில் எனக்கு நகைச்சுவை கலந்த குணசித்ர கதாபாத்திரம். இந்த வாய்ப்பு கிடைத்தது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.

முதல் முறை ரஜினி சார் படத்தில் நடிப்பது உண்மையிலே மிகவும் பெருமையாகவும் சந்தோஷமாகவும் உள்ளது என்றார் மணி.

No comments:

Post a Comment