தமிழில் வாய்ப்புகள் வராமல் போனதால் வெறுத்துப் போன ரம்யா நம்பீசன் இப்போது தெலுங்குக்கு தனது இடத்தை மாற்றி விட்டார்.
மலையாளத்தில் நடித்துக் கொண்டிருந்த ரம்யாவை ராமன் தேடிய சீதைக்காக தமிழுக்குக் கூட்டி வந்தார்கள்.
படம் நன்றாக ஓடியது. ரம்யாவுக்கும் நல்லஅறிமுகம் கிடைத்தது. ஆனால் தொடர்ந்து வாய்ப்புகள்தான் வரவில்லை. இதனால் தொடர்ந்து மலையாளத்திலேயே நடித்து வந்தார்.
ஆனால் இப்போது ரம்யாவைத் தேடி தெலுங்குப் பட வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளதாம்.
துட்டும் ஜாஸ்தி, அதிக வாய்ப்புகளும் வரும் வாய்ப்பு இருப்பதால் தெலுங்குக்கு முக்கியத்துவம் தரத் திட்டமிட்டுள்ளாராம் ரம்யா. முதல் கட்டமாக சாரை வீரராஜு என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ரம்யா.
விருமாண்டி படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கண்ணன் இப்படத்தை இயக்குகிறாராம்.
தமிழில் தற்போது ரம்யா வசம் ஒரே ஒரு படமாக ஆட்டநாயகன் மட்டுமே உள்ளது. இதில் ஷக்தியுடன் ஜோடி போட்டுள்ளார் ரம்யா என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் படம் இழுபறியாகிக் கொண்டிருப்பதால்தான் ரூட்டை மாற்றி விட்டாராம் ரம்யா.
No comments:
Post a Comment