எந்திரன் படத்தில் 57 விதவிதமான உடைகள் மற்றும் வித்தியாசமான பழங்குடிப் பெண் வேடத்தில் தோன்றுகிறாராம் ஐஸ்வர்யா ராய்.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க, ஷங்கர் இயக்கும் எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடிக்கிறார். இவருக்கு மிகப்பெரிய சம்பளம் தரப்பட்டுள்ளது.
படம் குறித்த தகவல்கள் பெரும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தாலும், அதில் பணியாற்றும் கலைஞர்களஅ சமயத்தில் அவ்வப்போது கூறி வருகின்றனர்.
எந்திரனில் ஐஸ்வர்யா ராய்க்கு மேக்கப் கலைஞராக பணியாற்றுவர் ஓஜா ரஜனி.
எந்திரனில் தனது பங்கு குறித்தும், படத்தில் ஐஸ்வர்யா ராயின் அழகு மற்றும் மேக்கப் குறித்தும் அவர் கூறியுள்ளதாவது:
எந்திரன் இந்தியாவின் மிகச் சிறந்த ஷோவாக இருக்கும் என்று நினைக்கிறேன். திரைப்படம் என்று பார்த்தால் நான் ஐஸ்வர்யா ராயின் மேக் அப் உமனாக பணியாற்றுவது எந்திரனில்தான்.
எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு 57 விதவிதமான காஸ்ட்யூம்கள் மற்றும் மேக்கப் உத்திகளை ஐஸ்வர்யாவுக்கு கையாண்டுள்ளோம்.
குறிப்பாக ஒரு பாடலில் மெக்ஸிகன் பழங்குடி இனப் பெண் ணைப் போன்ற தோற்றத்தில் வருவார். அந்த தோற்றத்தில் அவரது இளமையும் கவர்ச்சியும் இளைஞர்களை தீப்பிடிக்க வைக்கும். இன்னொரு பக்கம் மணீஷ் மல்ஹோத்ராவின் சிறப்பான டிஸைனிங் படத்துக்கே புதிய அழகைக் கொடுத்துள்ளது..., என்றார்.
No comments:
Post a Comment