தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற கோல்கத்தா அணி முதல் பேட்டிங் செய்ய ராஜஸ்தானை கேட்டுக் கொண்டது.
இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்தது.
இரண்டாவதாக களமிறங்கிய கோல்கத்தா அணி 19.3 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இன்றைய தோல்வி மூலம் அரையிறுதிக்கு முன்னேறும் ராஜஸ்தான் அணியின் கனவு தகர்ந்தது.
ராஜஸ்தான் அணி வெற்றி பெறுவதை காண அதன் உரிமையாளரான நடிகை ஷில்பா ஷெட்டி ஆட்டம் துவக்கம் முதலே உற்சாகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால், அவரது அணி தோல்வியுற்றதால் சோகமானார். இதன் மூலம் ஷாருக்கானின் கோல்கத்தா அணி ஷில்பா ஷெட்டியின் கனவையும் தகர்த்தது.
No comments:
Post a Comment