Please Visite here - www.cenimagallary.blogspot.com

Monday, May 4, 2009

மிகப் பெரிய கோப்புகளை மின் அஞ்சல் அனுப்ப

இன்றைய உலகில் மின் அஞ்சல் இல்லாத ஒரு வாழ்க்கையை யோசித்துபார்கவே பயமாக உள்ளது. (மின் அஞ்சல் இல்லாமல் ஒரு நாள் அல்லது கணினி இல்லாமல் ஒரு நாள் என்று யாரவது ஒரு பதிவு போடலாம்). இந்த மின் அஞ்சல் அனைத்தும் இலவச சேவை என்பது சிறப்பு. (மின் அஞ்சல் அனைத்தும் கட்டணமானால் இன்னொரு பதிவும் போடலாம்).


இப்படி இலவச சேவை அளிக்கும் மின் அஞ்சல் தளங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. முதலில் ஒரு குறிப்பிட்ட இடங்களை மட்டுமே இலவச மின் அஞ்சல் உபயோகிப்பாளர்காளுக்கு கொடுத்தார்கள். இப்போது எந்த மின் அஞ்சல் தளத்தை எடுத்தாளும் Unlimited இடத்தை கொடுக்கிறார்கள். இப்படி Unlimited இடத்தை கொடுக்கும் அவர்கள் 10MB அளவுள்ள கோப்புகளை மட்டுமே அனுப்ப முடியும்.

அப்படி மிகப்பெரிய கோப்புகளை அனுப்ப சிலர் megaupload மற்றும் rapidshare போன்ற தளங்களை பயபடுத்துவார்கள் ஆனால் இது இவர்களுக்கு திருப்தி அளிக்கவில்லையாம். அதானால் இவர்கள் அறிமுகப்படுத்தியது தான் Filemail.com

இதன் சிறப்பு அம்ஸம் என்ன வென்றால், இதில் நீங்கள் Register செய்ய வேண்டியதில்லை. இதில் மூன்று வகையான சேவைகளை நமக்கு அளிக்கிறார்கள். இலவச சேவை இதில் நீங்கள் 2GB அளவுள்ள கோப்புகளை அனுப்பலாம். ஆனால் இதில் அதிகபட்சம் அந்த கோப்பு 3நாட்களுக்கு மட்டுமே Downlaod லிங்க் வேலை செய்யும் என்பது ஒரு கவலையான விஷயம்.

பிரிமியம் சேவை மற்றும் கார்பரேட் சேவை அளிக்கிரார்கள். நமக்கு இலவசமே போதும் என்கிறவர்கள்தான் இந்தியாவில் அதிகம் என நினைக்கிறேன். இருந்தாலும் கட்டண சேவையான பிரிமியம் சேவயை பற்றி தெரிந்து கொள்ள இங்கும் கார்பரேட் சேவை பற்றி தெரிந்து கொள்ள இங்கும் செல்லலாம். நீங்கள் இந்த பக்கதிற்க்கு செல்வதால் உங்களுக்கு எந்த பயனும் இல்லை.

Go to Filemail

No comments:

Post a Comment