Please Visite here - www.cenimagallary.blogspot.com

Sunday, May 10, 2009

இப்போ ஹீரோ இனி டைரக்டர் : விவேக் புரமோஷன்

'வந்தா மலை போனா....' இப்படி துணிந்து இறங்கும் நம்பிக்கை நட்சத்திரங்களில் விவேக்கின் பெயரையும் சேர்த்துக் கொள்ளலாம்.
கலையுலகில் காலூன்றி கால் நூற்றாண்டை தொடப்போகிறார் விவேக். சின்ன சின்ன வேடங்கள், சீர்யஸ் விஷயங்களை சிரிக்க சிரிக்க சொல்லும் காமெடியன் என விவேக்கின் கேரியரில் அடுத்தடுத்த வளர்ச்சி, பத்மஸ்ரீ வரை கொண்டு சென்றுள்ளது. நாலு வருஷத்துக்கு முன் ஹீரோ ஆசையும் உதிக்கவே 'பஞ்சு' படத்தில் ஹீரோவாகிறார் விவேக்' என விளம்பரமெல்லாம் செய்யப்பட்டது. முடிந்தவுடன் பஞ்சு டஸ்ட்பின்னில் போடப்பட்ட பொருளாய் கைவிடப்பட்டது. இதன்பிறகு 'சொல்லி அடிப்பேன்' படத்தில் நாயகன் வேஷம் போட்டார். விவேக்கின் ஹீரோ ராசி சனி மூலையில் இருக்கிறதோ என்னவோ படம் இன்னும் வரவில்லை. நம்மளே கதை, வசனம் எழுதி ஹீரோவா நடிக்கும் படமாவது வெளிவரும் என்ற நம்பிக்கையில் அதனையும் செய்துபார்த்துவிட்டார் விவேக். சரவண சக்தி இயக்கத்தில் 'கொண்டிதோப்பு சுப்பு' என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கும் விவேக் கதை, திரைக்கதை, வசனத்தையும் எழுதியுள்ளார். அடுத்து டைரக்ஷ்ன்தானா? விவேக்கிடம் கேட்டபோது, மறைமுகமாக ஒப்புக்கொண்டார். எப்படி? இதோ இப்படி.... "டைரக்ஷ்ன் வாய்ப்பு நிறைய வருது, ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாதுன்னு நான்தான் யோசிக்கிறேன். ஏன்னா அது பெரிய பொறுப்பு. அந்த பொறுப்புக்கு சில அனுபவங்கள் தேவை. அந்த அனுபவத்தை தெரிந்துகொண்டபிறகு அடுத்த வருஷம் ஆனாலும் ஆகும்" என்கிறார்.

No comments:

Post a Comment