Please Visite here - www.cenimagallary.blogspot.com

Monday, May 4, 2009

தமிழர்களே....சோனியா சென்னைக்கு வந்தால்... -:பாரதிராஜா ஆவேசப்பேச்சு



திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் என்ற அமைப்பு திரைப்பட டைரக்டர் பாரதிராஜா தலைமையில் தொடங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க கூடாது என்று பிரச்சாரம் செய்யவது என்று இந்த இயக்கத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.


அதன்படி நேற்று இரவு ஈரோடு பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக பிரச்
சார கூட்டம் நடத்தப்பட்டது. ஈரோடு பெரியார் நகரில் நடந்த கூட்டத்துக்கு டைரக்டர் பாரதிராஜா தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர், ’’நான் எத்தனையோ சினிமா சம்பந்தப்பட்ட கூட்டங்களில் பேசி இருக்கிறேன். எழுத்தாளர்கள் கூட்டத்தில் பேசி இருக்கிறேன். ஆனால் அரசியல் மேடைகளில் பேசி 40 ஆண்டுகள் ஆகிவிட்டன.

என்னுடைய அப்பா, அம்மா என் குடும்பம் முழுவதும் காங்கிரஸ் குடும்பம். 1962-67களில் காங்கிரஸ் கட்சிக்காக மேடை ஏறி பேசி இருக்கிறேன். அப்போது எதை எல்லாம் பேச வேண்டும் என்று ஒரு குறிப்பு தருவார்கள். நான் கேட்பேன் எல்லாம் பொய்யாக இருக்கிறதே என்று. அரசியல் என்றால் இப்படி எல்லாம் பேச வேண்டும் என்று பேச சொல்வார்கள்.

பிறகு எதற்கு பொய் சொல்லும் அரசியல், கலைத்தொழிலே போதும் என்று அரசியலை விட்டு வட்டேன். அன்று பொய் பேச வேண்டாம் என்று அரசியலை விட்டேன். இப்போது மெய் பேச வேண்டும் என்று இந்த கூட்டத்தில் பேச வந்திருக்கிறேன். என்னை இழுத்து வந்து விட்டார்கள்.

டெல்லி அரசு எனக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்தது. பத்மஸ்ரீ பாரதிராஜாவா? தமிழன் பாரதிராஜாவா? என்ற கேள்வி வந்தபோது, தமிழன் பாரதிராஜா என்கிற பெருமை மட்டும் போதும் என்று முடிவு செய்தேன். தமிழன் என்பதற்கு இணையான வேறு பட்டமே கிடையாது.

பாரதிராஜா யார் என்று வயலார் ரவிக்கு தெரியுமா? என்கிறார் இளங்கோவன். அவருக்கு தெரியுமா? நானும் வயலார் ரவியும் 25 ஆண்டுகால நண்பர்கள் என்று.

முத்துக்குமாரை தெரியாது என்கிறார். முத்துக்குமாரை தெரியாமல் தமிழன் இருக்கலாமா? அவருக்கு ஓடுவது தமிழ் ரத்தமா?.

தனி ஈழம் என்று யார் குரல் கொடுத்தாலும் அவர்களை வாழ்த்துகிறோம். துரோகிகளை நாங்கள் அடையாளம் காட்டுகிறோம். நல்லவர்களை தேடிக்கொள்ளுங்கள்.

16 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். இப்போது புரட்சியை தொடங்கி இருக்கிறோம். இன்னும் 10 நாட்களில் தேர்தலில் அது பிரளயமாக மாறவேண்டும்.

ஓட்டு கேட்க சோனியா வரக்கூடாது. அப்படி அவர் 6-ந்தேதி சென்னைக்கு வந்தால் மிக பலத்த எதிர்ப்பு காட்ட வேண்டும். தமிழர்களே.. தாய்மார்களே பொதுமக்களே நீங்கள் உங்கள் வீடுகளில் கறுப்பு துணியை கட்டுங்கள். சிறு கறுப்பு துணியை அணிந்து கொள்ளுங்கள். யாராவது கேட்டால் சோனியா வரும்நாள் எங்கள் துக்க நாள் என்று கூறுங்கள்’’என்று ஆவேசப்பட்டார்.

No comments:

Post a Comment