Please Visite here - www.cenimagallary.blogspot.com

Thursday, May 14, 2009

Googleஇன் புதிய தேடுபொறி அறிமுகம்

Google நிறுவனம் மிகவும் மேம்படுத்தப்பட்ட வசதிகளைக்கொண்ட மொபைல்களுக்கான புதிய தேடுபொறி ஒன்றை நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் தேடுபொறியானது கடந்த 24 மணித்தியாலம், கடந்த வாரம், கடந்த மாதம் எனவும், வீடியோ, ப்ளாக், வெப் எனவும் வேறு முறைகளிலும் தகவல்களைப் பிரித்துப் பட்டியலிடுவதோடு பாவனையாளர் தனக்குத் தேவையானவற்றை வடித்தெடுக்கும் (Filter) வசதியும் கொண்டு அமைந்துள்ளது. அத்துடன் இவை அனைத்தையும் ஒரே தடவையில் வேகமாகவும் தரவல்லது. இவ் வசதிகள் இவ்வளவு நாளும் கணினியில் தேடுபவர்களுக்கே கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.




அத்துடன் Google squared என்ற பெயருடைய கணினிகளுக்கான புதிய தேடுபொறி ஒன்றும் இந்தமாத இறுதியில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது நீங்கள் தேடும் விடயம் சம்பந்தமான வெப் தளங்களைப் பட்டியலிடாமல், நீங்கள் தேடும் விடயத்துக்குப் பொருத்தமான தகவல்களைத் தொகுத்தளிக்கும் வசதியைக் கொண்டிருக்கும்.



உதாரணமாக Small Dog எனத் தேடினால் படத்தில் உள்ளது போல சிறிய நாய்களைப் பற்றிய தகவல்களை தரும்.


இப்போதே இணையம் என்றால் Google என்றாகிவிட்டது. நான் அடிக்கடி பயன்படுத்தும் தளங்களைக்கூட Googleஇல் தேடி, அதன்பின்னேயே செல்வது வளக்கமாகிவிட்டது. இவ்வளவு ஏன்? எனது ப்ளாக்கிற்கே நான் Googleஇல் தேடித்தான் வருகிறேன். இப்போதே Google அமரிக்காவின் 63 வீதமான இணையச் சந்தையை தன்வசம் வைத்திருக்கிறது.



இதுவரை Google தனது 365 வகையான தயாரிப்புக்களை பாவனைக்கு விட்டிருக்கிறது. இவற்றில் இந்த வருடத்தின் முதல் காலாண்டில் மட்டும் 120 தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்படியே போனால் இணையத்தின் ஏகபோக உரிமையை Google கொண்டாடும் நாள் வெகு தொலைவில் இல்லை எனலாம்.

No comments:

Post a Comment