தமிழ் சினிமாவுல இருக்குற எல்லா இளசான ஹீரோக்களுக்கும் கல்யாணம் முடிஞ்சிகிட்டே வருது,அந்த கூட்டத்துல இப்போ ஜெயம் ரவியும் சேர்ந்துட்டாரு..,அடுத்தமாசம் 6 ஆம் தேதி அவரோட கல்யாண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கபோகுது, வழக்கமா பணக்கார வீட்டு பசங்களுக்கும்,சினிமாக்காரங்களுக்கும் நடக்கும் மேயர் இராமநாதன் செட்டியார் கல்யாண மண்டபத்துல தான் இவரோட கல்யாண வரவேற்பு நிகழ்ச்சியும் நடக்கபோகுது.
அது விசயமா இன்னிக்கி எல்லா பத்திரிகைகாரங்களையும் அவர் சந்திச்சி விஷயத்தை சொன்னாரு,ஆளு கல்யாணம் சந்தோஷம் போல ரொம்ப அழகா,பளிச்சின்னு இருந்தாரு. அவரோட உட்பி (அப்படித்தான் சொன்னாரு) பேரு ஆர்த்தி, சென்னையில லயோலா காலேஜுல தான் பிசினஸ் மேனஜ்மென்ட் படிச்சாங்களாம், இப்போ ஒரு பெரிய கம்பெனியில வேலை பாக்குறாங்களாம்,அதுமட்டுமில்லாம இவங்களும் ஒரு தயாரிப்பாளரோட பொண்ணுதான்,இவங்க அம்மா சுஜாதாவிஜயகுமார் பிரபலமான தெலுங்கு டிவி சீரியல் தயாரிப்பாளர். தமிழ்ல சுந்தர்.சி யை ஹீரோவா வச்சி"வீராப்புன்னு"ஒரு படத்த தயாரிச்சாங்க.
"கல்யாணத்துக்கு பிறகு வேலைக்கு போக வேண்டாம்ன்னு சொல்லிட்டேன், அவங்க தான் என்னோட சரியான ஜோடின்னு எனக்கு நான் முடிவு பண்ணிட்டேன், எல்லா விசயத்திலேயும்எங்க ரெண்டு பேருக்கும் அவ்வளவு ஒத்துமை இருக்கு, அவங்க ரொம்ப இனிப்பானவங்க,என்ன நல்லா பாத்துப்பாங்க,ரொம்ப அன்பானவங்க எப்படியெல்லாம் தன்னோட வருங்கால மனைவிய பத்தி வெட்கப்பட்டுகிட்டே சொன்னார் ஜெயம்ரவி, நீங்களும் அவர வாழ்த்துங்க.
பேசுறப்போ அப்பா எடிட்டர் மோகனும்,அண்ணன் இயக்குனர் "ஜெயம்"ராஜாவும் கூட இருந்தாங்க.
No comments:
Post a Comment