Please Visite here - www.cenimagallary.blogspot.com

Thursday, May 7, 2009

ரஜினி மகள், கமல் மகள் - ரேஸில் முந்துவது யார்?



‘ரஜினி&கமல்’ படங்களின் ரிலீஸ் என்றால் இருதரப்பு ரசிகர்களுக்கும் அது திருவிழா. சிறந்த நண்பர்களாக இருந்துகொண்டே தொழிலில் ஒருவரையொருவர் எதிர்கொள்ளும் ஆரோக்கியமான போட்டி இந்தத் தலைமுறை நடிகர்கள் அவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். இரு இமையங்களின் பெண் வாரிசுகள் தொடர்ந்து ஒரே நேரத்தில் சினிமாவில் இறங்கியது ஆச்சர்ய ஒற்றுமை.

சௌந்தர்யா ரஜினிகாந்த், ‘ஆக்கர் ஸ்டுடியோ’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி செய்திகளில் பரபரப்பானார். ரஜினி பற்றி ‘சுல்தான் தி வாரியர்’ எனும் அனிமேஷன் படத்தைப் பல கோடி ரூபாய் செலவில் எடுக்கத் தொடங்கினார்.

கமல் மகள் ஸ்ருதி மாடலிங்கில் இறங்கி இளம் நடிகைகளைக் கலங்கடித்தார். ‘மாடலிங் சும்மா ஹாபி. இசைதான் எனக்கு பேபி’ என்று இசைக்குழு தொடங்கினார்.

இரண்டு வாரிசுகளின் சினிமா என்ட்ரி எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்ததிற்கு முக்கிய காரணம் இருவருமே அப்பாக்களின் ஆசியோடு களத்தில் இறங்கினார்கள் என்பதுதான். சௌந்தர்யா ஹாலிவுட் படத்தயாரிப்பு நிறுவனமான ‘வார்னர் பிரதர்ஸ்’ கம்பெனியுடன் இணைந்து படம் தயாரிக்கப்போகிறார் என்று செய்தி வந்ததில் மூக்கில் விரல் வைக்காதவர்கள் இல்லை. இருபது வயதில் இப்படி ஒரு டீலா? என்று பெரிய தயாரிப்பு நிறுவனங்களே மிரண்டு போயின. கடந்த ஜனவரி மாதம் 14&ஆம் தேதி பத்து படங்களுக்கு ஆக்கர்&வார்னர் நிறுவனங்கள் பூஜைப் போடுவதாக பேச்சு அடிபட்டது.

இன்னொரு பக்கம் பல நூறு கோடி ரூபாய் முதலீட்டில் இந்திய சினிமாவில் காலடி எடுத்து வைத்தது ரிலையன்ஸ் நிறுவனம். தமிழகத்தில் சௌந்தர்யாவின் ‘சுல்தான் தி வாரியர்’ அனிமேஷன் படத்தயாரிப்பில் அவர்களும் முதலீடு செய்கிறார்கள் என்று முடிவானதும் சௌந்தர்யா தமிழ் சினிமாவின் முக்கிய புள்ளியானார். கமல் மகள் மாடலிங், மியூசிக் ட்ரூப் என்று அடக்கி வசிக்க ரஜினி மகள், சௌந்தர்யா பிஸினஸ் டீலிங்கில் எகிறி அடித்தார். அப்பாவின் ஆலோசனையில் திரைப்பட நுணுக்கம் தெரிந்தவர்களை அணி சேர்த்து பத்து படங்களை முடிவு செய்யும் முயற்சியில் இறங்கினார் சௌந்தர்யா. ஏ.ஆர். முருகதாஸ், கௌதம் மேனன், ராதாமோகன் போன்ற வெற்றி இயக்குனர்களை சம்மதிக்க வைக்க முடியாமல் போனதால் சௌந்தர்யாவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. உடன் இருந்தவர்கள் சொன்ன மார்கெட் நிலவரம் குறித்த தவறான தகவல்களை, அப்படியே நம்பி அதை வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்திடம் வழங்கினார்.

இயக்குனர் வெங்கட் பிரபுக்கு அதிக சம்பளம் பேசியதோடு அட்வான்ஸும் அவசர அவசரமாக வழங்கிவிட்டார். பெரிய இயக்குனர்களையும் சம்மதிக்க வைக்கவில்லை, மார்கெட் நிலவரம் விசாரிக்காமல் முடிவு எடுத்துவிட்டார் என்று வார்னர் பிரதர்ஸ் தரப்பில் அதிருப்தி. கையில் இருந்து இரண்டு கோடி வரை வெங்கட்பிரபுவின் ‘கோவா’ படத்தில் இறக்கிவிட்ட பிறகு, பின்வாங்க முடியாத சூழல். வார்னர் வெளியேறினாலும் படத்தைத் தயாரித்து கௌவரத்தைக் காப்பாற்றிக்கொள்ள முடிவு செய்து ஷுட்டிங் கிளம்பினார் சௌந்தர்யா. ‘ரெசஷன்’ என்று காரணம் சொல்லி ரிலையன்ஸும் பேக் அடிக்க கொஞ்சம் குழப்பத்தில் இருக்கிறார் அம்மணி. அப்பாவின் வழிக்காட்டுதலில் சீக்கிரமே மீண்டுவிடுவார் என்று சொல்கிறார்கள்.

இன்னொரு பக்கம் கமல் மகள் ஸ்ருதி ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். கமலின் சொந்த தயாரிப்பான ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்தில் இசை அமைப்பாளர் ஆனார். பின்னணி பாடகி ஆனார். அடுதடுத்து ஹாட்ரிக் அடிக்கும் ஸ்ருதி காட்டில் இப்போது வெற்றி மழை.
அடுத்த வருடத்திலிருந்து வெளிப்படையாகவே வாரிசுகள் களத்தில் மோதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்களின் போட்டி உலகமாக இருந்த சினிமாவில், இளம் பெண்களின் ஆரோக்கியமான இந்தப் போட்டியை வரவேற்கவே செய்யலாம்!

No comments:

Post a Comment