படப்பிடிப்பு முடிந்து மும்பை புறப்பட விமான நிலையம் சென்ற நடிகை மீனாட்சிக்கு டிக்கெட் எடுத்துத் தராமல் தயாரிப்பாளர் இழுத்தடித்ததால் 12 மணி நேரம் விமான நிலையத்திலேயே தவிப்புடன் காத்திருந்தார்.
'கருப்பசாமி குத்தகைதாரர்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், மீனாட்சி. மும்பையைச் சேர்ந்த இவர் முதல் படத்தில் பாவாடை தாவணியில் வந்தார். இப்போது முழுமையான கவர்ச்சிக்கு மாறி கலக்க ஆரம்பித்துள்ளார்.
'த நா அல 4777,' 'ராஜாதிராஜா' ஆகிய படங்களில் கவர்ச்சி [^] வேடமேற்று நடித்துள்ளார்.
இப்போது, திருமலை இயக்கத்தில் 'அகம் புறம்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு [^]க்கா சென்னை வந்த மீனாட்சி, படப்பிடிப்பு முடிந்து மீண்டும் மும்பை கிளம்பினார்.
அவருக்காக, காலை 9.30 மணி விமானத்தில் டிக்கெட் எடுத்திருந்தார் தயாரிப்பாளர். ஆனால் 30 நிமிடங்கள் தாமதமாக விமான நிலையத்தை வந்தடைந்தார். அதற்குள் விமானம் [^] புறப்பட்டுச் சென்று விட்டது.
அடுத்த விமானத்தில் டிக்கெட் போடும்படி எடுத்துத் தரும்படி இயக்குநர் [^] திருமலைக்கு போன் செய்து கேட்டார். அவரும் உடனே ஏற்பாடு செய்வதாக கூறினார். ஆனால், மீனாட்சி மும்பை செல்வதற்கு டிக்கெட் எடுக்கவே இல்லையாம். ஒவ்வொரு முறை விசாரிக்கும்போதும், தயாரிப்பாளர் தரப்பில் இழுத்தடிக்கப்பட்டதாம்.
மும்பை மீனாட்சியை சென்னையிலேயே இருக்க வைத்துவிட நினைத்தார் போலிருக்கிறது தயாரிப்பாளர்!.
காலை 10 மணிக்கு விமான நிலையம் [^] சென்ற மீனாட்சி, இரவு 10 மணி வரை விமான நிலையத்திலேயே காத்திருந்தாராம்.
ஒரு வழியாக 12 மணி நேரம் விமான டிக்கெட்டுக்காக காத்திருந்து தவித்த அவர் இரவு 11 மணி விமானத்தில் மும்பை போய் சேர்ந்தார்.
விமான நிலையத்தில் இருந்தவர்கள் மீனாட்சியை வேடிக்கை பார்த்தபடி இருந்தனர்.
No comments:
Post a Comment