Please Visite here - www.cenimagallary.blogspot.com

Thursday, May 7, 2009

விபச்சாரம்: மீண்டும் கன்னட பிரசாத் கைது!!

விபச்சார தடுப்புச் சட்டத்தில் கைதாகி, குண்டர் சட்டத்தில் சிறைவாசம் அனுபவித்த பின் விடுதலையாகி வெளியில் வந்த விபச்சார புரோக்கர் கன்னட பிரசாத் மீண்டும் கைதாகியுள்ளார். காரணம்.. 'அதே' தான்.

சென்னை மற்றும் தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பர் ஒன் புரோக்கராக, போலீசுக்கு தண்ணி காட்டி வந்தவர் கன்னட பிரசாத்.

திரையுலகின் முக்கிய புள்ளிகளை கைக்குள் போட்டுக் கொண்டு பிரபல நடிகைகள் தொடங்கி, துணை நடிகைகள் வரை தனது விபச்சாரத் தொழிலுக்குப் பயன்படுத்தி வந்தார்.

முதல்முறையாக கடந்த 2002ம் ஆண்டு போலீசில் சிக்கினார் கன்னட பிரசாத். குண்டர் சட்டத்தில் ஓராண்டு அடைக்கப்பட்டார்.

பிறகு ஜெயிலில் இருந்து வெளியே வந்த அவர், தலைமறைவாக இருந்தபடி, ஊருக்கு ஊர் தனது புரோக்கர்களை நியமித்து ஹைடெக்காக விபச்சார தொழிலை நடத்தினார். பெரிய தொழிலதிபர்களிலிருந்து, அரசியல் புள்ளிகள் வரை இவரது வாடிக்கையாளர்களாக இருந்ததையும், இவருக்கு திரையுலக நடிகைகளுடன் இருந்த தொடர்பு, அந்த தொடர்பை ஏர்படுத்திக் கொடுத்த சினிமாக்காரர்கள் குறித்தும் பல்வேறு செய்திகள் உலா வந்தன.

இதைத் தொடர்ந்து 2007ம் ஆண்டு கன்னட பிரசாத், அவனது கள்ளக்காதலி குஷும், 2-வது மனைவி விமலா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கன்னட பிரசாத், விமலா இருவரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். குஷும் ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவானார்.

2008ம் ஆண்டு மே மாதம் கன்னட பிரசாத் குண்டர் சட்டம் முடிந்து விடுதலையானார்.

மீண்டும் அதே தொழிலில்...

போலீசுக்கு நன்கு பழக்கமாகிவிட்டதாலும், இந்தத் தொழிலில் கிடைக்கிற வருமானத்தின் காரணமாகவும் விபச்சாரத் தொழிலை விட முடியாத கன்னட பிரசாத், மீண்டும் தன் பழைய தொடர்புகளைப் புதுப்பித்து பரபரப்பாக பிஸினஸில் இறங்கினார்.

இந்த முறையும் நிறைய துணை நடிகைகள், மும்பை, பெங்களூரைச் சேர்ந்த கல்லூரி மாணவிகளை வைத்து விபச்சாரத்தில் இறங்கினார்.

இதற்காகவே தி.நகர் சிஐடி நகரில் பெரிய பங்களா எடுத்து அதில் இளம் பெண்களைத் தங்க வைத்து விபச்சாரம் நடத்தி வந்ததை, விபசார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் செல்லப்பா தலைமையிலான போலீசார் கண்டுபிடித்தனர்.

ஏற்கெனவே கன்னட பிரசாத்தின் பழைய கூட்டாளிகள் சிலரைக் கைது செய்திருந்த போலீஸ், அவர்கள் மூலமாக, தலைமறைவாக இருந்த கன்னட பிரசாத்தையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

ஏற்கெனவே நான்கு வழக்குகள் அவர் மீது போடப்பட்டிருப்பதால், இம்முறையும் கன்னட பிரசாத் குண்டர் சட்டத்தில் அடைக்கப்படும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment