Please Visite here - www.cenimagallary.blogspot.com

Saturday, June 13, 2009

'எனக்கு 2, லட்சுமிக்கு 8'!

முத்திரை படம் பெரிதாகப் பேசப்படுமோ இல்லையோ, அதன் நாயகிகளுக்கு நாயகர்கள் கொடுத்ததாக கூறப்படும் முத்தம் படு பெரிதாக பேசப்பட்டு வருகிறது.

மறைந்த ஒளிப்பதிவாளர்-இயக்குநர் ஜீவாவின் மனைவி அனீஸ் உருவாக்கும் படம்தான் முத்திரை. நிதின் சத்யா, அவருக்கு ஜோடியாக மும்பையின் மஞ்சரி பாத்னிஸ், டேணியல் பாலாஜி, அவருக்கு ஜோடியாக லஷ்மி ராய் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ஹீரோக்கள் கடந்த சில நாட்களாக சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

முதலில் பரபரப்பை ஏற்படுத்தியவர் நிதின் சத்யா. தானும், மஞ்சரியும் சேர்ந்து ஒரு லிப் லாக் காட்சியில் நடித்திருப்பதாக அவர் கூறப் போக ரசிகர்களிடையே உற்சாகம் கூடியது.

ஆனால் அப்படி எந்தக் காட்சியிலும் நடிக்கவி்ல்லை என்று மஞ்சரி மறுக்கவே பரபரப்பானது. நிதின் சத்யா சொல்ல வந்தது வேறு, அது தவறான கோணத்தில் செய்தியாக வந்து விட்டது என்று கூறியிருந்தார் மஞ்சரி.

இந்த நிலையில் இப்போது இன்னொரு ஹீரோவான டேணியல் பாலாஜி புது தகவலை வெளியிட்டுள்ளார். நானும், லஷ்மி ராயும் கூட முத்தக் காட்சியில் நடித்துள்ளோம். ஒன்றல்ல, இரண்டல்ல, பத்து முத்தத்தை பகிர்ந்து கொண்டுள்ளோம் என்று டீடெய்லோடு கூறியுள்ளார் பாலாஜி.

இதனால் மேலும் பரபரப்பு கூடியுள்ளது. இதுகுறித்து பாலாஜி கூறுகையில், லஷ்மி ராய் ரொம்ப அழகு. அவர் பக்கத்தில் போனால் எந்த ஆணுக்கும், காதல் மூடு வரும். எனக்கும் கூட அப்படித்தான்.

முத்தக் காட்சியில் நடித்தபோது ரொம்ப கூலாக இருந்தார். அவரது மார்புப் பகுதியில் முத்தமிடுவது போன்ற ஒரு காட்சியில் நடிக்க நான் தயங்கினேன். ஆனால் அவரோ, கூச்சப்படாதே, சும்மா கொடு என்று உற்சாகமூட்டினார்.

இந்தப் படத்தில் ஒரு பாடல் காட்சியில் பத்து முத்தங்களை இருவரும் பகிர்ந்து கொண்டோம். நான் எட்டு முத்தம் கொடுத்தேன். அவர் 2 முத்தம் கொடுத்தார் என்று கூறியுள்ளார் பாலாஜி.

ஆனால் பாலாஜி கூறுவது போலவோ அல்லது நிதின் சத்யா கூறுவது போலவோ ஒரு முத்தக் காட்சியும் படத்தி்ல இல்லை என்று தயாரிப்பு நிர்வாகத் தரப்பில் கூறுகிறார்கள்.

பாலாஜி மற்றும் லஷ்மி ராயின் உதடுகள் உரசிக் கொள்வது போல மட்டுமே காட்சி உள்ளது. மற்றபடி இருவரும் உதடுகளைக் கவ்வி முத்தமிட்டுக் கொள்வது போல எந்தக் காட்சியும் இல்லை என்கிறது அந்த செய்தி. இரு ஹீரோக்களும் இந்தப் படத்தை வைத்து தங்களுக்கு விளம்பரம் தேடிக் கொள்வது போலத் தெரிகிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

'வாய்'மை என்னவோ..!

No comments:

Post a Comment