நடிகர் ஜெயம் ரவி-ஆர்த்தி திருமணம் இன்று சென்னையில் நடந்தது.
காலை 7.30 மணிக்கு மணமகள் ஆர்த்திக்கு தாலிகட்டி வாழ்க்கைத் துணைவியாக ஏற்றார் ரவி.
அடையாறு பார்க் ஷெராட்டன் ஓட்டலில் நடந்த இந்த பிரமாண்ட திருமண விழாவுக்கு திரையுலக சூப்பர் ஸ்டார்கள் ரஜினி மற்றும் கமல் நேரில் வந்து வாழ்த்தினர்.
திரையுலகின் முன்னணி நடிகர் நடிகைகள் பெரும்பாலானோர் வந்து வாழ்த்தினர்.
ஜெயம் ரவியின் தந்தை எடிட்டர் மோகன் , தாயார் வரலட்சுமி, அண்ணனும் இயக்குநருமான ராஜா, பிஆர்ஓ ஜான் ஆகியோர் நிகழ்ச்சிக்கு வந்தவர்களை வரவேற்றனர்.
இந்த திருமணத்துக்கு திரையுலக முக்கியப் பிரமுகர்கள், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களை மட்டும் அழைத்திருந்தனர். எனவே அனைத்துப் பிரிவினரும் வந்து வாழ்த்த வசதியாக பிரமாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்துள்ளனர்.
எம்ஆர்சி நகரில் உள்ள மேயர் ராமநாதன் திருமண மண்டபத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வருவார்கள் எனத் தெரிகிறது.
No comments:
Post a Comment