Youtubeஇல் வீடியோக்களைப் பார்க்கும் பழக்கம் பலருக்கும் இருக்கும். சில வேளைகளில் அவற்றைத் தரவிறக்கி வைத்திருக்க வேண்டும் என நினைப்போம். அதற்கு கணினியில் அதற்கான மென்பொருள் நிறுவியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் Youtubeஇல் இருந்து வீடியோ தரவிறக்கிக்கொள்ள முடியாது.
ஆனால் அதற்காக சில தளங்கள் உள்ளன. அவற்றில் சென்று நீங்கள் தரவிறக்க விரும்பும் வீடியோவின் URL இனைக் கொடுத்தால் நேரடியாகவே தரவிறக்கிக் கொள்ளலாம். எந்த ஒரு மென்பொருளும் தேவையில்லை.
முதலில் KissYouTube என்ற தளத்தைப் பார்ப்போம்.
இதிலே வீடியோ தரவிறக்குவது மிகமிகச் சுலபம். உதாரணமாக நீங்கள்
http://www.youtube.com/watch?v=CCYRkC40KDQ
என்ற வீடியோவைப் பார்க்கிறீர்கள். அது உங்களுக்குப் பிடித்துவிடுகிறது. அதை தரவிறக்கிக்கொள்ள விரும்புகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அதற்கு உங்கள் உலவியின் Address Bar இல் உள்ள மேலே குறிப்பிட்ட URL இல் Youtube என்ற பகுதிக்கு முன்னால் kiss என்ற பதத்தைச் சேர்த்துவிட்டால் போதும்.
http://www.kissyoutube.com/watch?v=CCYRkC40KDQ
அந்த வீடியோவை தரவிறக்குவதற்கான பட்டன் வந்துவிடும். இலகுவாக தரவிறக்கிக்கொள்ளலாம். இதில் FLV Movie File ஆகவே வீடியோ கிடைக்கின்றது. இங்கே சென்று அதை இயக்குவதற்கான மென்பொருளை இறக்கிக்கொள்ளலாம்.
இரண்டாவது தளம் Vixy.net
இந்தத் தளத்தின் சிறப்பு இதில் நீங்கள் Youtube விடியோவை உங்களுக்குப் பிடித்த Format இல் தரவிறக்கிக்கொள்ள முடிவதுதான்.
நீங்கள் தரவிறக்க விரும்பும் வீடியோவின் URL இனை இந்தப் பெட்டியில் இட்டபின் அந்த வீடியோ எந்த Format இல் வேண்டுமோ, அதை கீளேயுள்ள பெட்டியில் தெரிவுசெய்தபின் தரவிறக்கிக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment