திருமணத்துக்குப் பிறகு கட்டாயம் தொடர்ந்து நடிப்பேன். சினிமாவையும்... என் அம்மாவையும் ஒருபோதும் பிரிய முடியாது. அதனால் கல்யாணத்துக்குப் பிறகும் சென்னையில்தான் இருப்பேன். நிச்சயம் பெங்களூரில் செட்டிலாக மாட்டேன்' என்கிறார் நடிகை மீனா.
மீனாவுக்கு கடந்த மாதம் பெங்களூரைச் சேர்ந்த சாப்ட்வேர் எஞ்ஜினீயர் வித்யாசாகருடன் திருமணம் நிச்சயமாகியுள்ளது.
வருகிற ஜூலை 12-ம் தேதி திருமணம்.
திருமணத்துக்குப் பிறகு படங்களில் நடிப்பாரா... பெங்களூர் போய்விடுவாரா என்பது குறித்து மீனாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறிய பதில்:
ஜூலை 12-ந்தேதி எனக்கு திருமணம் நடக்கிறது. கணவராக வரப்போகும் வித்யாசாகர் பெங்களூரில் வசிக்கிறார். திருமணத்துக்கு பிறகும் நிச்சயம் தொடர்ந்து நடிப்பேன். கேரக்டர்களில் கவனம் செலுத்துவேன்.
என் அம்மாவுக்கு நான் ஒரே பெண். அவரை என்னால் பிரிய முடியாது. அதேபோல சினிமாவில் எனக்கென்று நல்ல பெயர் இருக்கிறது. எனவே இவர்களைப் பிரிய முடியாது என்பதை நிச்சயதார்த்தத்துக்கு முன்பே என் மாமியார் வீட்டில் சொல்லிவிட்டேன்.
நான் சென்னையில் அம்மாவுடன் தங்க என மாமியார் வீட்டிலும் முழு சம்மதம் தெரிவித்து விட்டனர், என்றார் மீனா.
No comments:
Post a Comment