முன்னாள் சினிமா நாயகியும், இன்னாள் டிவி ஹீரோயினுமான தேவயானி, வெள்ளித் திரைக்கு அம்மாவாக ரீ என்ட்ரி கொடுக்கிறார்.
நடிகைகளிலேயே மிகவும் வித்தியாசமானவர் தேவயானி. தனக்கென்று தனி பாலிசியே வைத்துள்ள அவர் அதற்கு முரணாக நடந்து கொள்ளவே மாட்டார்.
திருமணமானதும் திரைப்படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்ட தேவயானி தற்போது டிவியில்தான் தொடர்ந்து நடித்து வருகிறார்.
ஏகப்பட்ட சினிமா பட வாய்ப்புகள் வந்தபோதும் கூட தயக்கமே இல்லாமல் மறுதலித்து விட்டார். ஹீரோயினாக நடிக்க மாட்டேன், மனசுக்குப் பிடித்தால்தான் நடிப்பேன், கோடி கொடுத்தாலும் வில்லத்தனமாக நடிக்க மாட்டேன் என்று கூறி வருகிறார் தேவயானி.
இடையில் ஐந்தாம்படையில் வித்தியாசமான கேரக்டரில் நடித்திருந்தார் தேவயானி. தற்போது தான் தயாரிக்கும் திருமதி தமிழ் படத்தில் வக்கீல் கேரக்டரில் வருகிறாராம் தேவயானி. இப்படத்தில் கணவர் ராஜகுமாரன்தான் நாயகன் என்பது தெரிந்திருக்கும்.
இந்த நிலையில் தபூசங்கர் இயக்கும் லைலா மஜ்னு விளையாட்டு படத்தில் அம்மா கேரக்டரில் வருகிறாராம் தேவயானி.
இப்படத்தின் நாயகன் ராமகிருஷ்ணன். இவருக்குத்தான் அம்மாவாக நடிக்கப் போகிறார் தேவா. குங்குமப்பூவும், கொஞ்சும் புறாவும் படம் மூலம் ஹிட் ஆனவர் ராமகிருஷ்ணன்.
தேவயானிக்காக இந்தப் படத்தில் சூப்பர் ஹிட் அம்மா பாட்டு ஒன்றையும் வைத்துள்ளனராம்.
No comments:
Post a Comment