Please Visite here - www.cenimagallary.blogspot.com

Sunday, June 28, 2009

பென் டிரைவ் உஷார் மேட்டர்!

ஹலோ

"ஹலோ ..." ன்னு தூரத்திலிருந்து சத்தம் கேட்டவுடன் .."நம்மள எவண்டா கூப்பிடரவன்னு" திரும்பி பார்த்தா " எக்ஸ்கியுஸ் மீ சார் ..ஒன் மினிட் ப்ளீஸ்! அப்படின்னு டிப் டாப்பா ஒரு ஆள் என்னை நோக்கி வந்துகொண்டு இருந்தான்.

"சார் நான் ஒரு சேல்ஸ் மேன். என்கிட்ட பென் டிரைவ் நிறைய இருக்கு எல்லாமே 32 ஜி பி..
வெல ஒன்னும் அதிகமில்லை ஜஸ்ட் ஐந்நூறு ரூபா தான்" அப்படின்னான்!






என்னாது 32 ஜி பி யா ?
என்கிட்ட இருக்கிற லாப்டாப்பே நாப்பது ஜி.பிதான் தமாந்தூண்டு மெமரி ஸ்டிக்கு முப்பத்திரண்டு ஜி பி யா ? எத்தன படம் ,,எத்தன பிச்சரு எத்தன டேட்டா சேவ் பண்ணலாம்னு அப்படின்னு வாய திறந்துக்கிட்டு யோசித்துக்கொண்டிருக்கும் போதே என் பிரண்டு ஒருத்தன் "இருநூத்தி ஐம்பது ரூபான்னா வாங்கறோம்" அப்படின்னு பாதியாக குறைத்தான்.

அதிக பேரம் பேசாமல் டீலுக்கு ஒத்துக்கிட்டான்....

என்கூட இருந்த ஜுனியர் ஒருத்தன் "சார் இது வொர்க் ஆகுமா ஆகாதான்னு செக் பண்ணனும்னு" சொன்னதுதான் தாமதம் ...
"எட்றா லேப்டாப்பை சொருகுடா பென் டிரைவை" ன்னு செக் பண்ணா வெரி நைஸ்! வொர்க் ஆகுது.. :)

டேட்டாவை உள்ளேயும் வெளியவும் இழுத்து போட்டுபார்த்தா சும்மா கலக்கல்..
இன்னியோட இந்த ஒரு ஜி பி ரெண்டு ஜி பி பென் டிரைவை எல்லாம் சீண்டக்கூட மாட்டேன்னு, ஆசை ஆசையா இந்த 32 ஜி பி பென் டிரைவ் ஐ யூஸ் பண்ணேன்.

எங்க ஆபிசுல இருக்கறவங்க எல்லாம் என்கிட்ட கோபப்பட்டாங்க ஏன் எனக்கு ஒன்னு வாங்கலன்னு !

நான் சொன்னேன் "அவன் யாரோ எவனோ தெரியாது ..நாங்கல்லாம் .ஆபீஸ் முடிஞ்சி எங்க ஏரியாவில் இருக்கிற ஓர கடையில தம்மு பத்த வச்சிக்கிட்டு இருக்கும்போது ஒருத்தன் வந்து வித்துக்கிட்டு இருந்தான் அவன் அட்ரஸ் எல்லாம் கேட்கல .. வெரி சாரி" அப்படின்னுட்டேன்..

மறுபடியும் அவன பார்த்தா ..உங்க எல்லாத்துக்கும் வாங்கி வைக்கிறேன் ..மனச தேத்திக்குங்க மக்களேன்னு கர்வத்துடன் சொன்னேன்..


ஒவ்வொரு நாள் காலையிலும் எங்க ஆபிசுல இருப்பவர்கள் "அவன் கிடைச்சானா ..அவன் கிடைச்சானா " ன்னு ஒரே தொல்லை ...நானும் அந்த ஏரியா பூரா தேடி பார்த்துட்டேன் ஆளே அகப்படலன்னு! ஒரு பிட்ட போட்டுட்டு ஒவ்வொரு முறையும் எஸ்கேப் ஆகிடுவேன்


இதெல்லாம் எத்தன நாளைக்கின்றீங்க ...

வெறும் ஏழு நாள்தான் .

இப்பல்லாம் பென் டிரைவ் உள்ள இருந்த அத்தனை மேட்டரும் கரப்ட் ஆகுது .
எப்ப கரப்ட் ஆகும்ம்னு கணிக்க முடியல..... பார்மெட் பண்ணி உபயோகிக்கனும்....பிறகு மறுபடியும் கரப்ட் ஆகும் திரும்பவும் பார்மெட் ...SH** too hectic :(

இதனாலேயே மிக முக்கியமான டேட்டாக்களை உள்ளே வைப்பதில்லை
இதுக்கு முன்ன இருந்த அந்த ஒன் ஜி பி பென் டிரைவை தேடி கண்டு பிடிப்பதற்குள் போதும் போதும்ம்னு ஆயிடிச்சி .

இப்பவும் எங்க ஆபிசுல இருப்பவர்கள் கேட்கிறாங்க பென் டிரைவை விக்கிறவன்
கிடைச்சானான்னு..

ஆனா இந்த முறை உண்மையை சொன்னேன் "நானும் அந்த ஏரியா பூரா தேடி பார்த்துட்டேன் ஆளே அகப்படலன்னு!"....




No comments:

Post a Comment