கமல்ஹாசனின் அடுத்த படமான உன்னைப் போல் ஒருவன் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியாகிறது.
இந்த தேதியில்தான் 50 ஆண்டுகளுக்கு முன் கமல் தனது திரையுலக வாழ்க்கையைத் துவங்கினார். அந்தப் பொன்விழாவை நினைவு கூறும் வகையில் உன்னைப்போல் ஒருவன் படத்தை இதே தேதியில் வெளியிடவிருக்கிறார்கள்.
எ வெட்னஸ்டே எனும் சூப்பர் ஹிட் இந்திப் படத்தைத் தழுவி எடுக்கப்படும் உன்னைப்போல் ஒருவன் படத்தில் கமல்ஹாசனுடன் மோகன்லால் நடித்துள்ளார். இதன் தெலுங்குப் பதிப்பில் மோகன்லாலுக்குப் பதில் வெங்கடேஷ் நடித்துள்ளார்.
கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஒரு இசையமைப்பாளராக தனது கேரியரை இந்தப் படத்திலிருந்து துவங்குகிறார்.
இன்னும் இருவாரங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விடும் என்றும், படப்பிடிப்பு முடியும்போதே அதன் எடிட்டிங் வேலையும் முடிந்து விடுவதால், போஸ்ட் புரொடக்ஷனுக்கு அதிக காலம் தேவைப்படாது என்றும் இயக்குநர் சக்ரி டோலெட்டி தெரிவித்துள்ளார்.
பெரிய விழா எடுத்து இந்தப் படத்தை வெளியிடும் திட்டத்தில் உள்ளனராம் கமல் ரசிகர்கள்.
No comments:
Post a Comment