Please Visite here - www.cenimagallary.blogspot.com

Friday, June 26, 2009

"Size Zero" கிளப்பும் பீதி!


Size Zero வா என்னய்யா இது புது கதையா இருக்குன்னு கேட்கிற ஆளா! அப்ப இதை படிங்க..ஓரளவு சுவாராசியமாகவும் இருக்கும் அதே சமயம் என்ன கொடுமை சார் இது! ன்னு டென்ஷன் பண்ணுவதாகவும் இருக்கும்.


நீங்க ஃபேஷன் டிவி பார்த்து இருப்பீங்க அதுல பார்த்தீங்கன்னா வர பொண்ணுக எல்லாம் பெரும்பாலும் குச்சி குச்சி யா இருப்பாங்க, ஃபேஷன், ஸ்டைல் என்றாலே இப்ப அப்படி தான் ஆகி விட்டது..இப்ப என்ன பிரச்சனைனா மேலை நாடுகள்ல இது வியாதி மாதிரி ஆகி விட்டது. அதாவது பொண்ணுக தங்கள் உடம்பை எலும்பு தெரியும் படி இளைக்க வைத்து திரிவது தான் தற்போதைய ஃபேஷன், அடப்பாவிகளா! என்னய்யா இது உலக கொடுமையா இருக்குன்னு சொல்றீங்களா! அப்படி எல்லாம் சொல்லப்படாது... தொடர்ந்து படிங்க..


எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்

நம்ம ஊர்ல எப்படி நடிகர் நடிகைகளை பார்த்து ரசிகர்கள் தங்கள் ஸ்டைல் களை மாற்றி கொள்கிறார்களோ அதே போல ஹாலிவுட் ல இருக்கிற நடிகர் நடிகையர் மற்றும் அங்குள்ள செலிபிரிட்டிகள் என்ன செய்தாலும் அதை அப்படியே கண்மூடித்தனமாக பின்பற்றும் கூட்டமும் உண்டு, இவங்க நமக்கு சற்றும் குறைந்தவர்கள் அல்ல. தற்போது ஹாலிவுட் கதாநாயகிகள் பலரை இந்த வியாதி பிடித்து ஆட்டுகிறது அதனால் தங்கள் எடையை தாறுமாறாக குறைத்து அபாயகரமாக போய் கொண்டு இருக்கிறார்கள் ஆர்வம் முற்றி போய். இவர்களை பார்த்து பலரும் உடல் இளைக்க முயற்சி செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.




மேலை நாடு பிரபலங்களான Victoria Beckham [ஃபுட்பால் விளையாட்டு வீரர் பெக்காமின் மனைவி, முன்பு Spice girls ல் இருந்தவர்(பார்க்க மேலே உள்ள முன் பின் திரும்பி இருக்கும் படம்)], Nicole Richie (கீழே பிகினியில் பீச்சில் ஓடி வரும் படம்,சூப்பர் ஃபிகர் ங்க இந்த பொண்ணு இப்ப பாருங்க எப்படி கொடுமையா இருக்குன்னு) ஆகியோர் இந்த Size Zero ல ரொம்ப பிரபலம், தற்போது இந்தியாவில் இதை ஆரம்பித்து இருப்பவர் பாலிவுட் கரீனா கபூர், பாவம்!! சல்மான் தான் கடுப்பாகிட்டாரு ..அதோட இல்லாமல் இப்படி இருக்கிறது கேவலமா இருக்குன்னு வேறு கூறி கரீனாவ கடுப்படித்து விட்டாரு ;-)



சரி size zero னா என்ன?

Women's Dresses and Suits

United States 4 6 8 10 12 14 16 18
Europe (Italy) 38 40 42 44 46 48 50 52
Europe (Scandinavia and Germany) 34 36 38 40 42 44 46 48
Europe (France, Spain and Portugal) 36 38 40 42 44 46 48 50
Europe (UK and Ireland) 8 10 12 14 16 18 20 22
Japan 5 7 9 11 13 15 17 19

இது பற்றி புதிதாக கேள்விபடுகிறவர்களுக்கு இந்த அளவுகள் குழப்பமாக தான் இருக்கும்

ஒவ்வொரு நாட்டிலும் உடைகளின் அளவு வெவ்வேறாக குறிக்கப்படுகிறது, நம்ம ஊர்லையே ஒவ்வொரு ப்ரேண்டுக்கும் ஒவ்வொரு சைஸ் இருக்கும், "கில்லெர்" ஜீன் ஒரு சைஸ் ல இருக்கும் "லீ" ஜீன் ஒரு சைஸ் ல இருக்கும், நாம கில்லெர் அளவு நினைத்து போட்டு பார்க்காம "லீ" எடுத்துட்டு வந்தா அது கூடவோ அல்லது குறைவாகவோ அளவு இருந்து விடும். தற்போது அமெரிக்காவில் பெண்களுக்கு இருப்பதிலேயே குறைந்த அளவாக 4 (அட்டவணையை பார்க்க) என்று குறிப்பிடப்படுகிறது இந்த உடை (எடை) கலாச்சாரம் பரவிய பிறகு உடைகளின் அளவு Size Zero ஆகி விட்டது, சுருக்கமா சொல்வது என்றால் இது தான் பெண்களுக்கு கடைசி அளவு இதற்க்கு கீழே சிறியதா உடை கிடையாது.

இதையும் தாண்டி "௦௦" (Double Zero) வும் வந்து விட்டது!!!! குண்டாக அல்லது சாதாரணமாக இருந்த பலரும் உடல் மெலிய டயட் மாத்திரைகளை உட்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள் மற்றும் உடல் குறைய என்னென்ன வழிகள் உள்ளனவோ அவை அனைத்தையும் பயன்படுத்த துவங்கி விட்டனர். மெல்லிதாக கூட இல்லாமல் அதை விட அபாயகரமாக மெலிய துவங்கி விட்டனர். இதை போல இல்லாதவர்கள் இப்படி நாம் இல்லையே என்று மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டனர்!! இதனால் உடலை எப்படி மற்றவர்களை போல இளைக்க வைப்பது என்று கவலையுடனே இருக்கிறார்கள்!!!

இங்கிலாந்து மற்றும் சில நாடுகளில் இதை போல Size Zero ல இருக்கிற பெண்களை ஃபேஷன் ஷோ க்களில் கலந்து கொள்ள அனுமதிக்க எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள், ரொம்ப மோசமான உடல்நிலையில் இருக்கிறார்கள் என்று தவிர்க்கிறார்கள்.


இந்த size zero ல இருக்கிறவங்க Anorexia நோய் வந்தவர்களை போல் உள்ளதாக கூறுகிறார்கள், இந்த நோய் வந்தவர்கள் உடல் எடை குறைந்து மெல்லியதாக காணப்படுவார்கள். எனவே size zero என்றாலே Anorexia வும் விவாதத்தில் கலந்து கொள்கிறது.




நம்ம ஊர்ல எல்லாம் இப்படி இருந்தா ரசிகர்கள் தெறித்து ஓடிடுவாங்க, நம்மவர்களுக்கு நமீதா மாதிரி புஷ்டியா!! இருந்தா தான் ரசிப்பாங்க. நமீதா இப்படி ஒரு முயற்சி செய்தா எத்தனை ரசிகர்கள் கொந்தளிச்சுடுவாங்கன்னு கொஞ்சம் யோசித்து பாருங்க :-))) நடிகைகள் குச்சி குச்சி யா இருந்தா கொலை வெறி ஆகிடுவாங்க.. "தோரணை" படத்துல ஸ்ரேயா size zero க்கு முயற்சித்து இருப்பாங்க படம் பார்த்த பல பேர், என்னப்பா இது! ஸ்ரேயா ஹாஸ்பிடல்ல இருந்து நேரா வந்துடுச்சா! என்று வெறுத்து போய்ட்டாங்க.. விஷால் கூட லிப் டு லிப் முத்தம் ல கூட ஒண்ணும் கிளுகிளுப்பே இல்லைன்னு அழுகாத குறையா சொல்றாங்க..அதனால நம்ம ஊருக்கு இதெல்லாம் ஒத்து வராது (கேர்ள்ஸ் நோட் திஸ் பாய்ண்ட்)

இவங்க எல்லாம் கஷ்டப்பட்டு size zero க்கு முயற்சி செய்துட்டு இருக்காங்க, நானெல்லாம் அதெல்லாம் செய்யாமையே அந்த அளவிற்கு மோசம் இல்லை என்றாலும் கிட்ட தான் இருக்கிறேன் :-)))

No comments:

Post a Comment