Please Visite here - www.cenimagallary.blogspot.com

Sunday, June 7, 2009

பயர்பாக்ஸ் மெதுவாகச் செல்கிறதா?



மொஸில்லாவின் பயர்பாக்ஸ் பிரவுசரின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பலரும் இது குறித்த சிறு சிறு தகவல்களைத் தெரிந்து கொள்ள ஆர்வத்துடன் உள்ளனர்.

உங்கள் கம்ப்யூட்டரில் பயர்பாக்ஸ் மெதுவாக இயங்குகிறதா? காரணத்தையும் தீர்வையும் பார்ப்போமா!

மெதுவாகச் செயல்படும் பயர்பாக்ஸ் பிரவுசரை வேகமாக இயங்க வைக்க அதன் கேஷ் மெமரியைக் காலி செய்திட வேண்டும். இதனால் வேகம் கூடுவதுடன் பிரவுசர் பாதுகாப்பாகவும் இயங்கும். இந்த கேஷ் பைல்களில் தான் உங்களுடைய பெர்சனல் தகவல்கள் இருப்பதால் அவை நீக்கப்படுவது உங்களுக்குக் கூடுதல் பாதுகாப்பினைத் தரும்.

1. Tools கிளிக் செய்து Options தேர்ந்தெடுக்கவும்.

2. ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸில் Advanced என்ற பட்டனை அழுத்தவும்.

3. இங்கு Network என்னும் டேப்பில் கிளிக் செய்திட இன்னொரு விண்டோ கிடைக்கும்.

4.இந்த விண்டோவில் "Offline Storage" என்பதன் கீழாக "Clear Now" என்ற பட்டனில் அழுத்தவும். பின்னர் இந்த டயலாக் பாக்ஸினை குளோஸ் செய்து வெளியே வரவும்.

இனி பயர்பாக்ஸ் விரைவாக இயங்கத் தொடங்கும். பெர்சனல் தகவல்களைத் திருடும் மால்வேர்களுக்கும் டேட்டா கிடைக்காது.

மொஸில்லா நிறுவனம் தன் பயர்பாக்ஸ் தொகுப்பின் 3.5 பதிப்பை விரைவில் வெளியிட உள்ளது. வெளியீட்டிற்கு முந்தைய ஆர்.சி.1 டெஸ்ட் பதிப்பு முதலில் வெளியிடப்படும். ஆனால் திட்டமிட்டபடி முழு சோதனைகளும் முடிக்கப்பட்டு இதனை வெளியிட முடியவில்லை. இந்த பதிப்பு முன் வெளியான பீட்டா பதிப்புகளைக் காட்டிலும் முழுமையான பாதுகாப்பு உடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பயர்பாக்ஸ் தொகுப்பின் புதிய பதிப்பு 3.1 என்ற எண்ணுடன் ஆரவாரம் எதுவும் இன்றி தொடங்கியது. அடுத்தடுத்த புதிய வசதிகள் இணைக்கப்பட ஆரம்பித்ததால் இந்த பதிப்பு 3.5 என்ற வரையில் நீட்டிக்கப்பட்டது. இதனால் முன்பு நிர்ணயம் செய்யப்பட்ட காலத்திற்கு பின்னாளில் இதன் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையே இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 வெளியானது. ஆப்பிள் நிறுவனம் தன் சபாரி 4 பதிப்பின் பீட்டா தொகுப்பை வெளியிட்டது. கூகுள் நிறுவனம் தன் குரோம் பிரவுசருக்கு பல அப்கிரேட் பைல்களை வெளியிட்டது. வர இருக்கும் பயர்பாக்ஸ் தொகுப்பில் புதிய தொழில் நுட்பங்களின் அடிப்படையில் பாதுகாப் பும் கூடுதல் வசதிகளும் தரப்பட இருக்கின்றன.

No comments:

Post a Comment