படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுத்தாலும் பரவாயில்லை... ஆனால் எக்காரணம் கொண்டும் கவர்ச்சிக் காட்சிகளை வெட்டாதீர்கள் என்று தணிக்கைக் குழுவினரைக் கேட்டுக் கொண்டுள்ளார் ஒரு இயக்குநர். அவர் பெயர் ஸ்ரீநாத். மறைந்த இயக்குநர் ஜீவாவின் மனைவி அனீஸ் தயாரித்துள்ள முத்திரை படத்தின் இயக்குநர்.
இப்படத்தில் லட்சுமி ராய் பார் டான்சராக செக்ஸி நடனம் ஆடியுள்ளார். நடன காட்சிகளில் முடிந்த அளவு ஆடைக் குறைப்பு செய்துள்ளதால் இந்த நடனம் குறித்து பரபரப்பாகப் பேசப்படுகிறது.
சில நடன அசைவுகள் மிகவும் செக்ஸியாக இருப்பதாகக் கூறிய தணிக்கைக் குழுவினர், அந்தக் காட்சியை வெட்டிவிடச் சொன்னார்களாம் படத்தின் இயக்குநரிடம். ஆனால் அவரோ, அதெல்லாம் முடியவே முடியாது. எப்படியாவது அந்தக் காட்சியை வெட்டாமல் சான்றிதழ் கொடுக்க முயற்சி செய்யுங்கள் என கேட்டுக் கொண்டாராம்.
'அப்படியானால் ஏ சான்றிதழ்தான் தருவோம் பரவாயில்லையா என தணிக்கைக் குழுவினர் கேட், பரவாயில்லை... தாராளமா ஏ சான்றிதழ் கொடுங்க... ஆனால் எந்தக் காட்சியையும் வெட்டாதீங்க', என கூறிவிட்டாராம் ஸ்ரீநாத்.
அது என்ன அவ்வளவு பிடிவாதம்?
"இந்தப் பாடலை நிறைய செலவழித்து எடுத்தோம். லட்சுமி ராயிடம் ரொம்ப கேட்டுக் கொண்டு கவர்ச்சியாக நடிக்க வைத்தோம். அவருடன் இந்தி கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்தும் இருக்கிறார் இந்தப் பாடலில். இது தவிர அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைய உள்ளது. இவற்றில் கை வைக்கப் பார்த்தார்கள் சென்சார் அதிகாரிகள். அதனால்தான் ஏ கொடுத்தாலும் கொடுங்க, ஆனா எந்தக் காட்சியும் வெட்டாதீங்க என உறுதியாக சொல்லிவிட்டேன். இப்போது ஏ முத்திரையுடன் வெளியாகிறது, எங்கள் முத்திரை!" என்கிறார் இயக்குநர்.
மஞ்சரி, கிஷோர், பொன்வண்ணன், சரவணன், ஆனந்த், கொச்சின் அனீபா உள்ளிட்டோர் நடிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் தயாராகியுள்ள முத்திரை திரைப்படம் இந்த வாரம் வெளியாக உள்ளது
No comments:
Post a Comment