Please Visite here - www.cenimagallary.blogspot.com

Saturday, June 13, 2009

ஏஜென்ட்டுடன் பிரிட்னி காதல்!

பாப் இளவரசி பிரிட்னி ஸ்பியர்ஸ், தனது ஏஜென்ட் ஜேசன் டிராவிக்குடன் காதலில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

27 வயதாகும் ஸ்பியர்ஸின் சிறு வயது தோழன்தான் டிராவிக். ஸ்பியர்ஸின் ஏஜென்ட்டாகவும் அவர் செயல்பட்டு வருகிறார்.

இந்தக் காதலுக்கு ஸ்பியர்ஸின் தந்தை ஜேமி ஸ்பியர்ஸும் பச்சைக் கொடி காட்டி விட்டாராம்.

இதுகுறித்து இங்கிலாந்து வார இதழ் ஒன்றில் வெளியாகியுள்ள செய்தியில், இருவரும் படு தீவிரமாக பழி வருகின்றனர். ஸ்பியர்ஸின் அப்பாவுக்கம், டிராவிக்கை பிடித்துப் போய் விட்டது. இதுவரை ஸ்பியர்ஸுக்குக் கிடைத்ததிலேயே நல்ல விஷயம் டிராவிக்கை அவர் காதலிப்பதுதான் என்று கூறுகிறது அந்த செய்தி.

ஸ்பியர்ஸ் ஏற்கனவே கெவின் பெடர்லைனைக் கல்யாணம் செய்து அவர் மூலம் 3 வயது சீன் பிரஸ்டன், 2 வயது ஜெய்டன் ஜேம்ஸ் என இரு குழந்தைகளுக்கு தாயானாவர்.

37 வயதாகும் டிராவிக், இப்போது ஸ்பியர்ஸ் எங்கு சென்றாலும் உடன் செல்கிறார். கடந்த மாதம் பஹாமஸ் தீவுக்கு இருவரும் ஜோடியாக சென்று அனுபவித்து விட்டு வந்தனராம்.

டிராவிக் மீது ஸ்பியர்ஸுக்கு முன்பிருந்தே காதல் இருந்ததாம். இருந்தாலும் அதை மறைத்துக் கொண்டு பெடர்லனைக் கல்யாணம் செய்து கொண்டார் அவர். இப்போது பெடர்லைனைப் பிரிந்து விட்டதால் லைன் கிளியராகி டிராவிக்குடன் காதலில் ஈடுபட்டுள்ளாராம்.

தற்போது இருவரும் லண்டனில் உள்ளனர். அங்கு பிரிட்னி பங்கேற்கும் தி சர்க்கஸ் என்ற பாப் இசை நிகழ்ச்சியில் டிராவிக்கும் கலந்து கொள்கிறார்.

No comments:

Post a Comment