ஒரு வழியாக 'தல'யாய பிரச்சனை ஒன்று தீர்ந்துவிட்டது... அசல் படத்தில் அஜீத்துக்கு சரியான ஜோடி அமைவதில் பெரிய தாமதம் ஏற்பட்டுவிட்டதால், படப்பிடிப்பு தள்ளிப் போய்க்கொண்டே வந்தது. இப்போது அந்த வேடத்தில் நடிக்க பாவனாவிடம் பேசி முடித்துள்ளார் இயக்குநர் .
சரண் இயக்கத்தில் சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படமான அசல் சில வாரங்களுக்கு முன் பூஜையுடன் துவங்கியது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்தப் படத்தைத் துவக்கி வைத்தார்.
அஜீத்துக்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை சமீரா ரெட்டி நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு இன்னொரு ஜோடியும் உண்டு. இந்த வேடத்துக்கு நாயகியை வலைவீசித் தேடி வந்தனர். ஆனாலும் பொருத்தமான நடிகை கிடைக்காததால் படப்பிடிப்பு தாமதமாகிக் கொண்டே வந்தது.
இந்த நிலையில் சினேகா, பாவனா இருவரிடமும் இந்த வேடத்துக்கு பேச்சு நடத்தப்பட்டது. இப்போது பாவனா இறுதி செய்யப்பட்டுள்ளார்.
பாவனா நடித்து வெளியான கடைசி தமிழ்ப் படம் ஜெயம் கொண்டான்.
அதன் பிறகு தெலுங்குப் பட உலகில் பிஸியாகிவிட்டார். தமிழ்ப் படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவும் இல்லை.
இந்நிலையில் அவருக்கு தெலுங்குப் படவுலகமும் பெரிதாகக் கைகொடுக்காததால், மீண்டும் தமிழில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என விரும்பினார். அதற்கு சரியான வாய்ப்பாக அசல் அமைந்துள்ளது.
எதிர்பார்த்து போலவே எல்லாம் அமைந்துவிட்ட சந்தோஷத்துடன் முதல்கட்ட படப்பிடிப்பு க்காக மலேஷியா பறக்கிறது அசல் குழு.
No comments:
Post a Comment