Please Visite here - www.cenimagallary.blogspot.com

Wednesday, June 10, 2009

கருப்பு வர்ணம்! (நல்லதா? கெட்டதா?)




கருப்பு வர்ணத்தை பற்றி எப்பொழுதாவது சிந்தித்திருகிறோமா ? நமக்கு பல வர்ணங்களின் பரிட்சயம் இருந்தும், கருப்புதான் பெரும்பாலோருக்கு பிடிக்க காரணம்? உண்மையை சொல்ல வேண்டும் என்றால் கருப்பு என்பது ஒரு வர்ணமே அல்ல!. கருப்பு என்பது நிறங்களின் இல்லாமை ஆகும். ஒரு பொருளானது, தன் மீது விழும் ஒளியை பிரதிபலிப்பதன் மூலம், குறிப்பிட்ட நிறத்தை உண்டாக்குறது. அப்படிபட்ட பொருள், தன் மீது விழும் ஒளியில் அனைத்து நிறங்களையும் உள்வாங்கிகொண்டு எந்த நிறத்தையும் பிரதிபலிக்கவில்லையெனில், அங்கு கருப்பு நிறம் உண்டாகிறது. பதிவர்கள் பலரது பதில்களில் கருப்பு வர்ணத்தை பிடிக்கும் என எழுதியிருந்தார்கள் . எனது பதிலும் அதுதான், அதனால் தானோ என்னவோ நான் இந்த பதிவிட காரணமாயிருக்கலாம்!




கருப்பின் குணம்
நாம் கருப்பு ஆடைகள் உடுத்தியிருக்கும் போது மெலிந்து காணப்படுவோம். வாழும் அறைகளில் கருப்பு வர்ணம் அடித்தால், நல்ல அகலமான அறைகள் கூட குறுகியது போல தென்படும் நம் கண்களுக்கு. கருப்பு வர்ணம் அடித்தத் பெட்டி, வெள்ளை வர்ணம் அடிதத பெட்டியை விட எடை அதிகமானதாக தோன்றும். கருப்பு வர்ணத்தினூடே எந்த ஒரு வர்ணம் சேர்ந்தாலும், பிரகாசமாய் ஜெலிக்கும்!.


கருப்பும், உலகமும்!
  • சீனாவில் கருப்பு வர்ணத்தை தண்ணீரை குறிப்பதற்க்கும், பணிகாலத்தை குறிப்பதற்க்கும், மேற்கு திசையை குறிப்பதற்க்கும் பயன்படுத்துகிறார்கள்!!
  • ஐரோப்பிய நாடுகளில் கருப்பு வர்ணத்தை, அஞ்சலி செலுத்தும் போது அணிவதற்க்கும், இறந்தவர்க்கு அணிவிக்கவும், அலட்சியமாக எடுத்துகொள்வதற்க்கும், கண்டனம் தெரிவிப்பதற்க்கும் பயன்படுத்துகிறார்கள்!!
  • தாய்லாந்தில் கருப்பு வர்ணத்தை, தீயசக்திகளின் குறியீடாகவும், மகிழ்ச்சியின்மையின் வர்ணமாகவும், துரதர்ஷ்டத்தை குறிப்பதற்க்கும் பயன்படுத்துகிறார்கள்!!
  • மெக்சிகோ, ஸ்பெயின், போர்த்துகீஸ், இட்டாலி, கிரீஸ் போன்ற நாடுகளில், கணவனை இழந்த பெண்கள் வாழ்வின் பிற்பகுதியை கருப்பு வர்ண உடையணிந்துதான் கழிக்கவேண்டும், அதுமட்டுமல்லாது முற்காலத்தில் மதத்தை குறிக்கும் ஒரு குறியீடாகவும், மதகுருக்கள் கருப்பு அங்கியை தவிர வேறெதயும் அணிய கூடாது என்ற சட்டமும் இருந்தது.
  • இங்கிலாந்தில் கருப்பு வர்ணத்தில் மட்டுமே பேருந்தும், வாடகை வாகனங்களும் காணகிடைக்கும், அதுபோல் கருப்பு வர்ணம் என்பது ஒரு அதிர்ஷ்டத்தின் அடையாளமாக கருதப்படுகிறது!

கருப்பும், சில நம்பிக்கைகளும்!

கருப்பு பூனை குறுக்கே சென்றால், போகும் காரியம் வெற்றி அடையாது என்பது நம்பிக்கை. (இங்கிலாந்தை தவிர்த்து. அவர்களுக்கு அது அதி்ர்ஷ்டம்!)

கருப்பு உடையில் இறந்தவர்களை புதைத்தால், அவர்கள் மறுபடியும் ஆவியாக வருவார்கள் என்பது!

கருப்பு வர்ண நாய் கனவில் வந்தால், உங்களுக்கு நெருங்கியவர்கள் யாரோ இறந்துவிடுவார்கள் என்பது!

கல்யாணத்தின் போது கருப்பு வர்ணம் கொண்ட விலங்குகள் நுழைந்தாலோ, குறுக்கே சென்றாலோ, கண் னில் தென்பட்டாலோ துரதர்ஷ்டம் என்பது!

கருப்பில் நல்லவை சில

கருப்பு டை - நீதிபதி அணிவது
கருப்பு அங்கி - பாதிரியார்கள் அணிவது
கருப்பு பெட்டி - ரகசியம் காக்கும் பெட்டி
கருப்பு பெல்ட் - கைதேர்ந்தவன் (சண்டை பயிர்சியில்)
கருப்பு பூனைபடை - பாதுகாவலர்கள்

கருப்பில் தீயவை சில

கருப்பு ஆடு - உளவாளி (கூட இருந்து குழி பறிப்பவன்)
கருப்பு சந்தை - திருட்டு பொருள்களை விற்பது
கருப்பு பட்டியல் - தேச துரோகிகளின் பட்டியல்
கருப்பு நகைச்சுவை - நம் நம்பிகைகளை, நமக்கு பிடித்தவர்களை வைத்து நைய்யான்டி செய்வது
கருப்பு பந்து - ஓட்டு போடாமல் ஒருவரை நிராகரித்தல்

கருப்பை பற்றி நான் இங்கு குறிப்பிட்டுள்ளது கடலில் ஒரு துளிதான். கருப்பு நிறம் என்பது நல்லது என்று ஒரு சாராரும், தீமை என்று மறுசாராரும் வாதிக்கலாம் ஆனால், நம் வாழ்வில் தவிர்க்க முடியாத வர்ணம் ஆகிவிட்டது கருப்பு!!.

No comments:

Post a Comment