Thursday, June 18, 2009
PowerPoint – Essentials
மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பை நாம கத்துக்கும் போது நமக்கு மிகவும் பிடிச்சது பவர்பாயிண்ட் தான். ஏன்னு நான் சொல்ல தேவையில்லை. அதுல இருக்குற அனிமேசன் தான்.
ஆனா ஒரு Professional Presentation தயாரிக்கும் போது எதையெல்லாம் நாம் பின்பற்றலாம்? என்னவெல்லாம் செய்யலாம், என்னவெல்லாம் செய்ய கூடாது. இதப்பத்தி இங்க பார்க்கலாம்.
முதல்ல Presentation எங்க செய்யப்போறீங்க-னு பாருங்க. சில பேர் projector-ல பண்ணுவாங்க, சில பேர் monitor-ல பண்ணுவாங்க.
Projector பயன்படுத்தும் போது, அறையின் வெளிச்சம், பார்வையாளர்களின் எண்ணிக்கை – இதையெல்லாம் பார்க்கணும்.
Template – அனைத்து Slideலேயும் ஒரே மாதிரி நிறம், எழுத்துரு, Bullets பயன்படுத்த Presentation சிறப்பாக அமையும்.
முடிந்த வரை நீங்களாக ஒரு Template தயார் செய்து கொள்வது நல்லது. கார்ப்பரேட் கம்பெனிகளில் அவர்களே தனியாக வச்சிருப்பாங்க.
கம்பெனியின் லோகோ பார்க்கும் படியான அளவாக இருந்தா பரவாயில்லை. Watermark ஆக slide background-ல் பயன்படுத்த வேண்டாம்.
அனிமேசன், slide transition – தவிர்ப்பது நலம்.
Background முடிந்த வரை வெள்ளை நிறம் பயன்படுத்தவும். வானவில் கலரெல்லாம் வேண்டாம்.
ஒரு தகவலை பத்தி பத்தியாக விவரிப்பதை விட Bullets உடன் ஒவ்வொரு வரியாக விவரிக்கலாம்.
எண்களை Tables பயன்படுத்தி விளக்குவதை விட, வரைபடங்கள் (Charts) பயன்படுத்தலாம்.
வரைபடங்களை பவர்பாயிண்டிலேயே தயார் செய்ய வேண்டும். இது கோப்பின் அளவைக் குறைக்கும். எக்சல்லில் தயார் செய்து அப்படியே Embedded Object ஆக ஒட்ட கூடாது. வேண்டுமானால் எக்சல்லில் தயார் செய்து அதை Import செய்து கொள்ளலாம்.
எக்சல்லில் தயார் செய்து Picture ஆக ஒட்டலாம். ஆனால் இதை எடிட் செய்ய முடியாது. இதனையும் தவிர்ப்பது நலம்.
வரைபடஙகளில் ஒவ்வொரு Series ம் வேறுபடுத்தி காட்ட நல்ல நிற வேற்றுமை உள்ள நிறங்களை பயன்படுத்தனும். (உதாரணத்திற்கு கருப்பையும், பிரௌன் நிறத்தையும் பயன்படுத்தினால் Projector ல் இரண்டுமே ஒன்றாக தான் தெரியும்.)
அனைத்து Slide-லேயும் ஒரே எழுத்துரு (Font) பயன்படுத்தனும்
ஒரு Slide-ல் ஒரே அளவுடைய எழுத்துரு (Font) மட்டுமே பயன்படுத்தனும்.
இது அனைவராலும் படிக்கும் அளவிற்கு ஓரளவு பெரியதாக இருக்கனும்.
ஆபீஸ் 2003 மற்றும் அதற்கு முந்தைய பதிப்புகளில் Organization Chart பயன்படுத்தாமல், Auto shapes பயன்படுத்தலாம். இதை ஒழுங்குபடுத்துவது எளிது.
கட்டாயமாக Slide எண் கொடுக்க வேண்டும்.
முடிந்தவரை ஏற்கனவே உள்ள Slide Layout பயன்படுத்தலாம். இதனால் மீண்டும் மீண்டும் Format செய்ய தேவையிருக்காது.
தேவையான இடங்களின் படங்களை இணைக்கலாம். ஆனால் இது எழுத்தின் மேல் overlap ஆகக் கூடாது.
முடிந்த வரை Present செய்யும் முன்பு நீங்களாக ஒரு முறை ஒத்திகை பார்ப்பது மேலும் சிறப்பாக அமையும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment