Please Visite here - www.cenimagallary.blogspot.com

Thursday, June 4, 2009

ஆட்சென்ஸ் குறித்த கேள்விகளும், பதில்களும்



1. எனக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வலைத்தளம் இருக்கிறது என வைத்து கொள்வோம், அப்படி இருக்கும் பச்சத்தில், ஒரு google adsense கணக்கு வைத்து கொண்டு எல்லா வலைத்தளத்திலும் விளம்பரம் செய்யலாமா ?

Yes. You can do. ஆமாம். தாராளமாக

2. ஒரே வலைத்தளத்தில் Google, Bidvertiser, Guruji இப்படி எல்லா விளம்பரங்களையும் போடா முடியுமா ? அல்லது ஏதாவது கட்டுப்பாடு உண்டா ?

போடலாம். தாராளமாக. ஆனால் ஒன்றுக்கொன்று வித்தியாசம் காண்பித்துப் போடவேண்டும். Bidvertiser, Adbrite, Guruji, Komli எதையும் இணைத்துப் போடலாம். ஆனால் வரும் விசிட்டர்கள் - வெறுப்பாகிடாமல் பார்த்துக்கொள்ளவும்.

3. நான் இப்போது இந்தியா'வில் வசித்து வருகிறேன், Google Check 'ஐ (காசோலை) அனுப்பும் போது TAX அல்லது Service Charge இப்படி எதாவது பிடித்து கொண்டு அனுப்புகிறதா ? டாலரில் தான் செக் அனுப்புமா ? or ரூபாயில் அனுப்புமா ? (ரொம்ப சில்லியா இருக்குனு கூச்சபடாதீங்கன்னே, எல்லாம் ஒரு தகவல் திரட்டுவதர்காகத்தான் )

tax, service charge பிடிப்பதில்லை. ஆனால் income tax அளவுக்கு உங்கள் adsense வருமானம் இருப்பின், நீங்களே மனமுவந்து அதை அரசிடம் காண்பித்து வருமானவரி கட்டவேண்டியது உங்களது கடமை. இதை google கூறுகிறது. டாலரில் வேண்டுமா / ரூபாயில் வேண்டுமா - என்பதை நீங்களே தீர்மானிக்கலாம். நான் எனக்கு இந்திய ரூபாய்களில் காசோலை பெற்றுக்கொள்ளும்படி அமைத்திருக்கிறேன்.

4. இப்போது நான் google 'டம் இருந்து காசோலை பெற்றுக்கொண்டுள்ளேன் அப்புறம் கொஞ்ச நாள் களைத்து வேறு நாடுகளுக்கு சென்று சிறிது காலம் வசிக்க வேண்டிய கட்டாயத்தில், என்னோட Google personal profile'லில் வசிக்கும் நாட்டை மாற்றினால் எதாவது தொந்தரவு வருமா ? இப்போது நான் google டம் இருந்து காசோலை பெற்றுக்கொண்டுள்ளேன் அப்புறம் கொஞ்ச நாள் களைத்து வேறு நாடுகளுக்கு சென்று சிறிது காலம் வசிக்க வேண்டிய கட்டாயத்தில், என்னோட Gஓக்லெ பெர்சொனல் profile ல் வசிக்கும் நாட்டை மாற்றினால் எதாவது தொந்தரவு வருமா ?

சீனாவைத் தவிர வேறு எங்கு வேண்டுமானாலும் அக்கவுண்ட்டை மாற்றிக்கொள்ளலாம். சீனாவுக்கு மாற்ற வேண்டும் என்றால், புதிய அக்கவுண்ட் உருவாக்குவதைத்தவிர வேறு வழியில்லை . யூரோ, டாலர் பிரச்சினை இருப்பின் அதை நீங்கள்தான் சமாளிக்க வேண்டும். ஜெர்மனி போன்ற நாடுகளில் இருந்து, இந்தியாவிற்கு மாற்ற முயற்சிக்கும்போது பிரச்சினை எழுந்ததாக நண்பர் கூறினார்.

5. Web Hosting பண்ணுவதற்கு சிறந்த தளம் ?

இந்தக் கேள்விக்கு பின்னூட்டம் வாயிலாகப் பதில் தந்தவர் :The Rebel

Best Webhosting Site-Hostgator.com

Plans- Start at $5 per month

Best Sites to Register Domain Names:
name.com(cheap n best)
dynadot.com
godaddy.com

Hope its useful for newbies.Its based on my personal experience.

கீழ்க்கண்ட கேள்வியைக் கேட்டவர் திரு. பிரபாகரன்

plz tell about guruji ads?

கூகிள் ஆட்சென்ஸ் வாயிலாக க்ளிக்குகளைப் பெறுவது மிகக் கடினம். ஒரு நாளில் 1000 பார்வையாளர்கள் வந்து தலைக்கு 3 பக்கங்களை வாசித்து, 3000 இம்ப்ரெசனைப் பெற்றிருந்தாலும், ஒட்டு மொத்த க்ளிக்குகளின் எண்ணிக்கையை பார்த்தால் 30 க்ளிக்குகள் விழுந்திருக்கும். இந்த 30 க்ளிக்குகளுக்கு 2$ ஏறி இருக்கும். குத்துமதிப்பாக 95 முதல் 100 ரூபாய்.

ஆனால் குருஜி ஆட்ஸில் இதே 30 க்ளிக்குகளுக்கு 15 ரூபாய் முதல் 30 ரூபாய் ஏறி இருந்தால் பெரிய விசயம்.
ஒரு க்ளிக்குக்கு ஐம்பது பைசா தரும் விளம்பரங்கள் குருஜியில் வந்ததை நண்பர் வடிவேலன் ஆர். சொன்னார்.

Google adsense சில ட்ரிக்குகள் செய்து ஒரே க்ளிக்கில் 10$ பார்த்தவர்களும் இருக்கிறார்கள். எனக்கு ஒரே க்ளிக்கில் அதிகபட்சமாக 7$ ஒரு முறை வந்தது. ஆனால் அது நல்ல விளம்பரமாகவும், வேறு நாட்டில் விழுந்த க்ளிக்காகவும் இருத்தல் வேண்டும். ஒவ்வொரு நாட்டில் இருந்து வரும் க்ளிக்குகளைக் கொண்டே நமது வருமானம் கணக்கில் கொள்ளப் படுகிறது. ஒரே விளம்பரத்தை அமெரிக்காவில் இருந்து க்ளிக்கினால் கிடைக்கும் பண மதிப்பு, இந்திய க்ளிக்கால் கிடைக்காது. இது நான் கண்டறிந்த உண்மை.

1 comment: