Please Visite here - www.cenimagallary.blogspot.com

Sunday, June 28, 2009

தாயின் `செக்ஸ்’ படத்தை விற்ற மகள்


Posted by Uyir 27 June 2009

கனடாவின் ஒன்டாரியா பகுதியை சேர்ந்த 19 வயது பெண், தனது தாயின் படுக்கை அறையில் இருந்த கேமரா ஒன்றை 8 ஆயிரம் ரூபாய்க்கு ஒருவரிடம் விற்றார். இது அவருடைய தாயாருக்கு தெரியாது. அந்த கேமராவுக்குள் அந்த பெண்ணின் தாயும் அவருடைய காதலரும் விதம் விதமான கோணங்களில் எடுத்துக்கொண்ட `செக்ஸ்’ உறவு பட `டேப்’ இருந்து இருக்கிறது.

கேமராவை வாங்கியவர் அந்த செக்ஸ் பட டேப்பை தனது நண்பர் மூலம் நகரம் முழுவதும் வலம் வரச்செய்துவிட்டார். தாயின் காதலன் மூலம் தகவல் தெரிந்ததும் உடனடியாக போலீசுக்கு புகார் செய்யப்பட்டு அதன்பேரில் கேமராவை திருடியதாக மகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



திருமண வாழ்வு நீடிக்க


30 வயதுக்குப்பிறகு திருமணம் செய்து கொண்டால் தான் நீடித்த திருமண வாழ்வு கிடைக்கும் என்பது அமெரிக்காவில் நிலவி வரும் பொதுவான கருத்து ஆகும். ஆனால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு இதை தவறு என்று சித்தரிக்கிறது.

23 முதல் 27 வயதுக்குள் திருமணம் செய்து கொள்ளும் ஜோடிகள் தான் நீண்ட காலம் வெற்றிகரமான தம்பதிகளாக இருக்கிறார்கள் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

டெக்சாஸ் பல்கலைக்கழகம் நடத்திய இந்த ஆய்வில், 20 வயதுக்கு முன்பு நடக்கும் திருமணம் பெரும்பாலும் விவாகரத்தில் முடிவதாக தெரிய வந்து உள்ளது. முதிர்ந்த வயதில் நடக்கும் திருமணமும் நீடிப்பதில்லை என்றும் ஆய்வு கூறுகிறது.

1970களில் திருமண வயது என்பது ஆண்களுக்கு 23 என்றும், பெண்களுக்கு 21 என்றும் இருந்தது. இப்போது அது 27-26 ஆக உயர்ந்து உள்ளது என்றும் ஆய்வு கூறுகிறது.



கண்ணீரால் காப்பாற்றப்பட்ட பெண்

சீனாவைச் சேர்ந்த பெண் குவோயிங். 47 வயதான இவரது மூளையில் ரத்தக்குழாய் வெடித்ததில் இறந்து போனதாக கருதிய குடும்பத்தினர் இவரது உடலைத் தகனம் செய்வதற்காக சுடுகாட்டுக்கு கொண்டு சென்றனர்.

அப்போது மூடியிருந்த அவரது கண்களில் இருந்து கண்ணீர் திரண்டு வெளியானதைப் பார்த்த உறவினர் ï இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என்ற முடிவுக்கு வந்தார். அதனால் அவர் திரும்பவும் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அக்கம்பக்கத்தினர் கொடுத்த நிதி உதவியைக் கொண்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அவர் குணம் அடைந்தார்.

தினதந்தி-

No comments:

Post a Comment