Please Visite here - www.cenimagallary.blogspot.com

Monday, June 1, 2009

ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தலில் லண்டன் தமிழ்ப் பெண் ஜனனி போட்டி

லண்டன்: ஐரோப்பிய நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக தமிழ்ப் பெண் ஒருவர் போட்டியிடுகிறார். அவருக்கான வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக கூறப்படுகிறது.

லண்டனில் வசித்து வருபவர் ஜனனி ஜனநாயகம். இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான ஜனனி ஜனநாயகத்தின் குடும்பத்தினர் நீண்ட காலத்திற்கு முன்பு அகதிகளாக இங்கிலாந்து [^] சென்றனர். தற்போது அந்த நாட்டில் வசித்து வருகின்றனர்.



ஜனனி ஜனநாயகம் தற்போது ஐரோப்பிய நாடாளுமன்ற எம்.பி தேர்தலில் போட்டியிடுகிறார். வருகிற வியாழக்கிழமை இந்தத் தேர்தல் [^] நடைபெறுகிறது.

லண்டனிலிருந்து போட்டியிடுகிறார் ஜனனி. லண்டனிலிருந்து எட்டு பேர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இங்கிலாந்தின் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களுடன் சில சுயேச்சைகளும் களம் கண்டுள்ளனர்.

இவர்களுடன் புலம் பெயர் தமிழர்களின் பேராதரவுடன் ஜனனி போட்டியிடுகிறார்.

அவருக்கு பிரிட்டிஷ் தமிழ் அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. லண்டனில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் [^] உள்ளனர். இவர்கள் அனைவருமே ஈழத் தமிழர்கள்தான். இவர்களின் ஆதரவு அப்படியே கிடைத்தால் ஜனனி நிச்சயம் வெற்றி பெற்று விடுவார்.

மேலும் இனவெறிக்கு எதிரான பல்வேறு அமைப்புகளின் ஆதரவும் ஜனனிக்குக் கிடைத்துள்ளது.

அதேபோல, பாரீஸில் இன்னொரு தமிழர் போட்டியிடுகிறார். இவர் புதுச்சேரியைச் சேர்ந்தவர்.

ஜனனி ஜனநாயகம் வெற்றி [^] பெற்று எம்.பி ஆனால், ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் எம்.பியான முதல் தமிழர் [^] என்ற பெருமை அவருக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment