Please Visite here - www.cenimagallary.blogspot.com

Wednesday, June 10, 2009

காதலில் மஞ்சரி..!

நடித்த முதல் படமே இன்னும் வரவில்லை. அதற்குள் மும்பையில் ஒரு காதலனைப் பிடித்து விட்டார் முத்திரை நாயகி மஞ்சரி.

முத்திரை படத்தில் அறிமுகமாகும் மும்பை வரவு மஞ்சரி. அரபுக் குதிரை போல அட்டகாசமாக இருக்கும் மஞ்சரி, முத்திரையில் முத்தக் காட்சியில் சூடு பறக்க நடித்தும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அமீர்கானின் தயாரிப்பில் உருவான சூப்பர் ஹிட் ஜானே துய யா ஜானே நா படத்தின் மூலம் ஹிட் ஆனவர் மஞ்சரி.

தமிழிலும் தனது முத்திரையைப் பதிக்க வந்திருக்கும் மஞ்சரி இப்போது காதல் வலையில் விழுந்துள்ளாராம். ஆனாலும் இதுவரை தனது காதலை காதலரிடம் சொல்லவில்லையாம். அவரும் சொல்லவில்லையாம்.

இன்னாமா இது கொயப்பமா கீதே..?

அது ஒன்றும் இல்லை. புனேவில் நடந்த ஜானே... படப்பிடிப்பின்போதுதான் சக நடிகர் ஒருவருடன் காதல் வயப்பட்டாராம் மஞ்சரி.

அவருடன் சாதாரணமாகத்தான் முதலில் பழகினாராம் மஞ்சரி. இப்போதோ அவரை தனது நெஞ்சத்துக்கு ஷிப்ட் செய்து விட்டாராம்.

இருந்தாலும் இருவரும் இதுவரை ஒருமுறை கூட ஐ லவ்யூ டா செல்லம் என்று சொல்லிக் கொண்டதில்லையாம். அவர் முதலில் சொல்லட்டும் என காத்திருக்கிறேன் என்கிறார் கண்களில் பட்டர்பிளை பறக்க.

No comments:

Post a Comment