தமிழில் நான் நடிக்க மறுப்பதாகச் சொல்லப்படுவதில் உண்மையில்லை. நிச்சயம் நான் தமிழில் நடிக்க தயார். ஆனால் அதற்கு நல்ல கதை வேண்டும் என்கிறார் அசின்.
இந்தியில் கஜினி பெற்ற பெரும் வெற்றியால் நிரந்தர மும்பைவாசியாகிவிட்ட அசின், எப்போதாவது
ஒரு முறை அதுவும் அவசியம் இருந்தால் மட்டுமே சென்னைக்கு வருகிறார்.
சமீபத்தில் கமலுடன் நடிக்கும் 19 ஸ்டெப்ஸ் படத்தில் நடிக்க சென்னை வந்தார். பின்னர் நிருபர்களிடம் பேசினார்.
லண்டன் ட்ரீம்ஸ் இந்திப் படத்துக்குப் பிறகு மேலும் இரு இந்திப் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாகவும், இந்த 19 ஸ்டெப்ஸ் மட்டுமே தான் இப்போதைக்கு நடிக்கும் தமிழ்ப்படம் என்றும் அவர் கூறினார்.
தமிழில் நடிக்க அதிக சம்பளம் கேட்பது ஏன் என்று அவரிடம் கேட்டனர்.
என் சம்பளம் பற்றி யாரும் என்னிடம் குறையாக சொல்லவில்லையே, என்றவர், சம்பளம் ஒரு பொருட்டல்ல. நல்ல ஸ்கிரிப்ட் இருந்தால் நிச்சயம் நடிப்பேன், என்றார்.
ஏற்கெனவே நல்ல சம்பளத்துடன் தனக்கு வந்த இரு தெலுங்குப் பட வாய்ப்புகளை மறுத்துவிட்டதாகத் தெரிவித்த அசின், விஜய்யின் 50வது படத்தில் நடிக்க முடியாமல் போனதற்குக் காரணம் தன்னிடம் தேதிகள் இல்லாததே என்றார்.
No comments:
Post a Comment