Please Visite here - www.cenimagallary.blogspot.com

Monday, June 1, 2009

மிஷ்கின் - இளையராஜா மோதல்: காரணம் என்ன?

வால்மீகி படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா மேடையில் பேசிய இயக்குனர் மிஷ்கின், "புதிய இயக்குநர்கள் ஒவ்வொருவரும் ஒரு படமாவது இளையராஜாவுடன் பணியாற்ற வேண்டும்" என்று சொல்ல, அதையடுத்துப் பேசிய இளையராஜா "யாரும் சிபாரிசு செய்ய வேண்டிய நிலையில் நான் இல்லை. இதற்குத்தான் நான் இம்மாதிரி கூட்டங்களுக்கு வருவதில்லை" என்று குமுறிவிட்டு இறங்கிச்சென்றுவிட்டார். இசைஞானியைத் தொடர்ந்து தானும் கீழே இறங்கிப் போய்விட்டார் மிஷ்கின்.





அதன் பின் அவரை நேரில் சந்தித்து சில விளக்கங்களைக் கொடுக்க முடிவு செய்தாராம் மிஷ்கின். பல முறை நேரில் போயும் ராஜாவைச் சந்திக்க முடியவில்லை. நீண்ட காத்திருத்தலுக்கு பிறகு சந்தித்தவரிடம், காச் மூச் என்று கோபப்பட்ட இளையராஜா, இனிமேல் என் ஏரியாவுக்கே வரக் கூடாது என்று அனுப்பினாராம்.




இப்படி இளையராஜா கோப்ப்படுவதற்குக் காரணம் இருக்கிறது. மிஷ்கின் இயக்கும் நந்தலாலா படத்தில் ஒரு நரிக் குறவப் பாடலை இளையராஜாவுக்கு தெரியாமல் வேறொரு ஸ்டூடியோவில் பதிவுசெய்து படத்தில் சேர்த்தாராம் மிஷ்கின். அது மட்டுமல்லாமல், இளையராஜா போட்டுகொடுத்த ஐந்து பாடல்களில் இரண்டைத்தான் படத்தில் சேர்த்தாராம். இரண்டாவது செயலையாவது பொறுத்துக்கொள்ளலாம். முதலில் செய்த வேலையை எந்த இசையமைப்பாளர்தான் ஏற்றுக்கொள்வார் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
*

No comments:

Post a Comment