Please Visite here - www.cenimagallary.blogspot.com

Tuesday, June 23, 2009

சரத்குமார் மகள் வரலட்சுமியின் 'மாம்மா மியா'!

நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி 'மாம்மா மியா' எனும் பெயரில் நாட்டிய நாடகம் ஒன்றை அரங்கேற்றுகிறார்.

இதுகுறித்த முறையான அறிவிப்பை நேற்று பத்திரிகையாளர் கூட்டத்தில் வெளியிட்டார் வரலட்சுமி சரத்குமார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் சரத் குமாரும் பங்கேற்று தன் மகளை அறிமுகப்படுத்தி வைத்தார்.

இதுகுறித்து வரலட்சுமி கூறியதாவது:

நடனம் மற்றும் நாட்டியத்தில் நிறைய சாதிக்க வேண்டும் என்ற ஆவல் உள்ளது. முறைப்படி நடனம் கற்ற நான் ஏற்கெனவே எனது குழுவினருடன் சில நாட்டிய நாடகங்களைத் தந்துள்ளேன்.

இப்போது 'மாமா மியா' எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய நாட்டிய நாடகம் ஒன்றை வரும் ஜூலை மாதம் 4, 5 தேதிகளில் சென்னை மியூசிக் அகாதெமியில் நடத்துகிறோம். மேலை நாட்டுப் நடனப் பின்னணியில், ஆங்கில மொழியில் இந்த நாட்டிய நாடகம் அரங்கேற்றப்படும், என்றார்.

இந்த நாடகத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு வித்தியாசமான நடனத்தை ஒரு நாடகமாகவே வெளிப்படுத்த உள்ளார் வரலட்சுமி.

முன்னதாக தனது நாடகம் மற்றும் நடனக் குழுவினரை பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார் வரலட்சுமி.

இதில் கலந்துகொண்ட சரத்குமார் [^], தனது மகள் வரலட்சுமி மற்றும் நடனக் குழுவினரை வாழ்த்தினார்.

சென்னை மட்டுமல்லாது பெங்களூர், ஹைதராபாத் நகரங்களிலும் இந்த நாட்டிய நாடகங்களை அரங்கேற்றுகிறார் வரலட்சுமி.

சிம்புவுக்கு ஜோடியாக 'திரு போடா திருமதி போடி-டண்டணக்கா ஜோடி' என்ற படத்தில் அறிமுகமாக இருந்தவர் வரலட்சுமி. ஆனால் அந்தப் படம் தள்ளிப் போடப்பட்டதால், இப்போது நாட்டிய நாடகம் மூலம் அரங்கேறுகிறார் வரலட்சுமி.

No comments:

Post a Comment