ராசி இல்லாத நடிகை என முத்திரை குத்தி எல்லோரும் என்னை ஓரம் கட்டினார்கள். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினி சார்தான் என்னை அதிலிருந்து காப்பாற்றி அதிர்ஷ்டசாலி நடிகையாக்கினார்", என்கிறார் நடிகை ஸ்ரேயா.
இதுகுறித்து சமீபத்தில் ஸ்ரேயா அளித்த பேட்டி:
நான் அறிமுகமானது எனக்கு 20 உனக்கு 18 படத்தில்தான். ஆனால் அந்தப் படம் ஓடவில்லை. அடுத்து ஜெயம் ரவியுடன் 'மழை' படத்தில் நடித்தேன். பொதுவாக தமிழில் ஜெயம் ரவிக்கு ஒரு ராசி உண்டு. அவருடன் நடிக்கும் புதுமுக நடிகைகள் எல்லோரும் பிரபலமாகி விடுவார்கள். சதா, திரிஷா , அசின், ஜெனிலியா என அப்பட்டியல் நீள்கிறது. நானும் இந்தப் பட்டியலில் வந்துவிடுவேன் என்றுதான் நினைத்தேன்.
ஆனால் எனக்கு அது நேர் விரோதமாக அமைந்துவிட்டது. அவருடன் நான் நடித்த 'மழை' படம் சரியாகப் போகவில்லை. என் முதல்படமும் சுமாராகத்தான் அமைந்தது. உடனே எனக்கு ராசி இல்லாத நடிகை என முத்திரை குத்தி விட்டார்கள்.
இனி தமிழ் படங்கள் அவ்வளவுதான் என்று நினைத்து தெலுங்கில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். அப்போதுதான் சூப்பர்ஸ்டார் ரஜினி சாருடன் 'சிவாஜி' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. சிவாஜி வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
அதிர்ஷ்டமில்லாமலிருந்த நான் ரஜினியால் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலியானேன். ராசி இல்லாத நடிகை என்ற 'இமேஜ்' விலகியது. இன்று என் நடிப்பு வாழ்க்கை ஹாலிவுட் வரை நீண்டதற்குக் காரணம் சிவாஜி என்ற படமும், ரஜினிசாரும்தான்.
நம்பர் ஒன் நடிகை போட்டியில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. எல்லா நடிகைகளுமே ஒவ்வொரு கால கட்டத்தில் நம்பர் ஒன் ஆக இருப்பார்கள். யாருக்கும் அது நிரந்தரமானது அல்ல... நான் சாய்பாபா பக்தை. எந்த கஷ்டம் வந்தாலும் அவர் கைவிடமாட்டார்", என்றார் ஸ்ரேயா.
No comments:
Post a Comment