இன்று முதல் எனது ரசிகர் மன்றங்கள் மக்கள் இயக்கமாக மாறுகிறது. இனி மக்கள் பிரச்சினைகளுக்காக நானும் எனது இயக்கத்தினரும் குரல் கொடுப்போம். மக்களுக்காக வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்துவேன்!, என்று நடிகர் விஜய் தனது பிறந்தநாளன்று அறிவித்துள்ளார்.
இன்று 36வது பிறந்த நாள் காணும் விஜய் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
ஆண்டுதோறும் என் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் பல்வேறு நல்ல காரியங்களை செய்து வருகின்றனர். பலர் தங்களின் வருமானத்துக்கு மீறி என் மீதுள்ள அபிமானத்தில் மக்களுக்கு நல்ல விஷயங்களைச் செய்து வருகின்றனர்.
இனி உலகம் கம்ப்யூட்டர்மயமாகப் போகிறது. இன்டர்நெட் இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்ற நிலை வந்துவிட்டது.
கல்வி, பொழுதுபோக்கு எல்லாமே இன்டர்நெட் வழியாகத்தான் என்பது உறுதியாகிவிட்டது. மக்களுக்கு கம்ப்யூட்டர் கல்வி பெரிதும் அவசியம்.
ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் கம்ப்யூட்டர் பயிற்சி மையம் அமைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்து வந்தேன். இதை ரசிகர்களிடம் கூறியதுமே அதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டனர்.
இந்த ஆண்டு எனக்கு மிகவும் விசேஷமான பிறந்தநாள். ரசிகர்கள் என் பொருட்டு கஷ்டப்பட்டு,இஷ்டப்பட்டு இந்த பணிகளை செய்து வருகின்றனர். அரசியல் அமைப்பாக மாறினால் இதே நலத் திட்டங்களை பெரிய அளவில் மேலும் சிறப்பாக செய்ய முடியும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அரசியல் அமைப்பாக மாற்றுவது தொடர்பாக ஆலோசனை கூட்டமும் நடத்தப்பட்டது உண்மைதான். நானே நேரடியாக ரசிகர்களைச் சந்தித்து கருத்துக்களை கேட்டறிந்தேன். ரசிகர்களை மட்டுமல்ல, பொது மக்களையும் சந்தித்து கருத்துக்களை கேட்டறிந்தேன். அதன் பிறகு தற்போது என்னுடைய பணியான நடிப்பதை செய்து வருகிறேன்.
இனி என் ரசிகர்கள்... தொண்டர்கள்!
அரசியல் கட்சி துவக்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இப்போது அது பற்றி நான் நினைக்கவில்லை. ஆனால் ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் எனக்கும் உடன்பாடு உள்ளது. ஆனால் எப்போது என்பது எனக்கு தெரியாது. என்னுடைய ரசிகர்கள் இப்போதே என்னுடைய தொண்டர்களாக மாறி விட்டனர்.
என்னுடைய இயக்கம் சார்பாக உள்ளூர் பிரச்சனைகளுக்காக நிச்சயமாக போராடுவார்கள் எனது இயக்கத்தினர். நானும் அதில் நிச்சயம் பங்கேற்பேன். வீதியில் இறங்கிப் போராடுவேன்.
மிரட்டல் வந்ததா?
அரசியல் கட்சி துவங்குவது பற்றி மிரட்டல் வந்ததா? என்று ஒரு நிருபர் கேட்டார்.
அதற்கு பதிலளித்த விஜய், 'மிரட்டற அளவுக்கெல்லாம் நான் பெரிய ஆளில்லை...' என்றார்.
வேட்டைக்காரன் படம் குறித்து பேசிய விஜய், இந்தப் படத்தில் ரசிகர்களுக்கு பெரிய செய்தி இருப்பதாகவும், தீபாவளி விருந்தாக படம் திரைக்கு வரும் என்றும் கூறினார்.
தனது 50 வது படத்தை சங்கிலி முருகன் தயாரிப்பதாகவும் விஜய் தெரிவித்தார்.
No comments:
Post a Comment