ஒபெரா யூனைட் என்ற புதிய தொழில்நுட்பத்தை ஒபெரா அறிமுகப்படுத்தியுள்ளது. வளர்ந்து வரும் இணைய தேவையும் அதனால் அதிகரித்து வரும் வழங்கியல் (Server) தேவைகளை குறைக்க இந்த புதிய தொழிநுட்ப்பத்தை ஒபெரா அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனால் நமக்கு என்ன பயன் நமக்கும் வழங்கியலுக்கும் சம்பந்தம் இல்லை என்று என்னினால் அது தவறு. நீங்கள் இணையத்தில் செய்யும் ஒவ்வொரு வேலைக்கும் இரண்டாம் நபர் (MiddleWare) தேவைப்படும்.
எ.டு கா : இணையத்தை பயன்படுத்த நீங்கள் இணைய சேவை வழங்குபவரிடம் (ISP) அனுகுவீர்கள் அவர் உலகில் உள்ள இணையத்தில் இனைக்க உதவுவார் ஆகையால் இணையத்தை பொருத்தளவில் நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலுக்கும் இரண்டாம் நபர் தேவைப்படுகிறார் அதையே இங்கு சற்று தொழில்நுட்ப ரீதியாக வழங்கியல் (Server) என்று குறிப்பிடுகிறோம்.
ஒபெரா யூனைட் மூலம் உங்கள் கணினியை ஒரு வழங்கியலாக செயல்பட வைக்கலாம். இதனால் நீங்கள் இரண்டாம் நபர் தளத்திற்க்கு சென்று உங்கள் படங்கள், பாட்டுக்களை ஏற்றி மற்றவரிடம் பகிர தேவையில்லை. நேரடியாகவே உங்கள் கணினியிலிருந்து பகி்ர்ந்து கொள்ளலாம்.
ஒபெரா யூனைட் புதிய தொழில்நுட்ப்பம் வருகிற ஒபெரா 10 பதிப்பில் சேர்த்துக் கொள்ளப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒபெரா யூனைட் தரவிறக்கம் செய்து நிறுவும் போது நீங்கள் புதிய அல்லது இருக்கும் ஒபெரா கணக்கை உபயோகித்து நிறுவ வேண்டும்.
மேல உள்ள நிகழ்படம் ஒபெரா யூனைட் நிறுவ உதவியாக இருக்கும், நிறுவும் போது ஒபெரா யூனைட் உங்களுக்கென தனி (Sub-domain) உங்கள் பெயரில் ஒன்றை உருவாக்கி கொடுக்கும். (computername.username.operaunite.com) இதில் நீங்கள் Computername என்பதை உங்கள் வீட்டுக்கணினிக்கென ஒரு பெயரை உருவாக்கலாம் (home.tothetech.operaunite.com) அல்லது நீங்கள் அலுவகத்தில் இருக்கும் போது அலுவலக கணினியில் ஒபெரா யூனைட் நிறுவி அதற்கென தனியாக computername உருவாக்கிக் கொள்ளலாம் (office.tothetech.operaunite.com) ஒவ்வொரு முறையும் ஒபெரா யூனைட் இணையத்தில் இனைக்கும் போது DNS என்று சொல்லப்படும் Domain Name System IP முகவரியை தானகவே உங்கள் கணக்கிற்க்கு(home.tothetech.operaunite.com) எடுத்துக் கொள்ளும் அதனால் Dynamic IP பற்றி கவலைப்படத் தேவையில்லை.
ஒபெரா யூனைட் சேவைகள்
ஓபெரா யூனைட் தற்போழுது ஆறு சேவைகளை வழங்குகிறது (கோப்பு பறிமாற்றம், பிரிட்ஜ், ஒளிபட பறிமாற்றம், ஊடக இயக்கி, இணைய வழங்கி, தி லாங்க்) மேலும் பல புதிய சேவைள் அறிமுகப்படுத்தப்படும் என்று ஒபெரா குறிப்பிட்டுள்ளது.
இந்த சேவைகளின் மூலமாக உங்கள் கணினியை ஒரு சிறிய வழங்கியலாக மாற்றலாம். அது மட்டும் இல்லாமல் இந்த சேவைகளை இயக்கிய பின் உங்களுக்கான தனி URLல் மூலமாக மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளலாம். எடு.கா (http://home.tothetech.operaunite.com/file_sharing/content/)
அப்படி பகிரும் போது எல்லாரும் உங்கள் கோப்புகளை பெற முடியும் ஆனால் சில முக்கியமான உறையை (Folder)களை நீங்கள் மற்றவர்களிடமிருந்து கடவுச்சொல் மூலமாக பாதுகாக்கலாம்.
பின்குறிப்பு : ஓபெரா யூனைட் சேவைகளை அனுபவிக்க சேவைகளை configure செய்ய வேண்டும் எ.டுகா : ஒளிபட பறிமாற்ற சேவையை துவக்கும் முன் நீங்கள் எந்த உறையில் (Folder)ல் உங்கள் ஒளிபடங்களை வைத்துள்ளீர்கள் என்று தெரிவிக்க வேண்டும்.
ஊடக இயக்கி :இந்த ஊடக இயக்கி (Media Player) மூலமாக உங்கள் mp3 கோப்புகளை உங்கள் நண்பர்களிடம் பகரிந்தும், உங்கள் கணினியில் இருந்து தரவிறக்கம் செய்யாமலயே உங்கள் நண்பர் படலும் கேட்கலாம். எடு.கா (http://home.tothetech.operaunite.com/meida_player/content/)
ஓபெரா யூனைட் பேஜ் ஒபெரா யயூனைட் பேஜில் உங்களைப் பற்றின விபரங்கள் மற்றும் உங்கள் கோப்புகள், ஊடக இயக்கி அகியவற்றின் குறிப்புகள் அடங்கிய பக்கம்.
ஒளிபட பறிமாற்றம்: ஒளிபட பறிமாற்ற வசதியின் மூலமாக உங்கள் படங்களை இரண்டாம் நபர் (எ.டுகா picasa, flickr) இல்லாமல் நேரடியாக உங்கள் நண்பர்களிடம் சேர்த்து விடலாம்.
தி லாங்க் : தி லாங்க் என்ற சேவை உங்கள் கணினியிலேய ஒரு சிறிய அரட்டை அரங்கத்தை ஏற்படுத்தி நண்பர்களிடம் அரட்டை அடிக்கலாம்.எடு.கா (http://home.tothetech.operaunite.com/the_longue/lounge.html)
இணைய வழங்கி : உஙகள் கணினியில் ஒரு HTML நிரலை எழுதி அதை மற்றவர்களிடம் காண்பிக்க இரண்டாம் நபர் தளங்களை நாட வேண்டியிருந்தது, இந்த ஓபெரா யூனைட் மூலமாக உங்கள் இணைய உலாவியிலேயே ஒரு வழங்கியலை அமைத்து அதை configure செய்து உங்கள் நண்பர் அல்லது வாடிக்கையாளரிடம் உங்கள் HTML பக்கத்தை காண்பிக்கலாம்.எடு.கா (http://home.tothetech.operaunite.com/webserver/content/)
பிரிட்ஜ்: அடிக்கடி இணையத்தில் குறிப்பு எடுப்பவர்களுக்கு பிரிட்ஜ் வசதி உபயோகமானது இதையும் நீங்கள் பகிர்ந்து நண்பர்களிடம் கொள்ளலாம் (எடு.கா : http://home.tothetech.operaunite.com/fridge/
Thanks to-
No comments:
Post a Comment