பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன்: நடிகை நக்மா
காதலன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை நக்மா தொடர்ந்து பாட்ஷா, மேட்டுக்குடி, ரகசியபோலீஸ், வில்லாதி வில்லன் உட்பட ஏராளமான படங்களில் நடித்தார்.
காதலன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை நக்மா தொடர்ந்து பாட்ஷா, மேட்டுக்குடி, ரகசியபோலீஸ், வில்லாதி வில்லன் உட்பட ஏராளமான படங்களில் நடித்தார்.
நடிகை ஜோதிகாவின் அக்காவான இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியுடன் இணைத்து பேசப்பட்டார். பின்பு நடிகர் சரத்குமாருடன் இணைத்து பேசப்பட்டார்.
ஆறு வருடங்களுக்கு முன்பு மும்பையில் குடியேறிய அவர் காங்கிரஸ் கட்சியில் தன்னை நிரந்தர உறுப்பினராகவும் இணைத்துக்கொண்டார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் பிரசாரமும் செய்தார். வரும் தேர்தலில் போட்டியிடவும் ஆர்வம் காட்டி வருகிறார்.
நேற்று உ.பி. மாநிலம் கான்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார் நக்மா.
அப்போது,’’பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன். எனது ஆர்வத்தை கட்சி மேலிடத்தில் ஏற்கனவே தெரிவித் திருக்கிறேன்.
மும்பையில் உள்ள வடமேற்கு மும்பை தொகுதியில் போட்டியிட விரும்புகிறேன். உ.பி.யில் போட்டியிட வாய்ப்பு தந்தாலும் சரிதான்.
அங்கு அலகாபாத், மொராதாபாத் ஆகிய ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட கட்சி மேலிடம் அனுமதித்தால் போட்டியிடவும் தயாராக இருக்கிறேன்.

எனது இந்த விருப்பம் குறித்து கட்சி மேலிடம் விரைவில் முடிவு செய்யும் என்று நம்புகிறேன்.
உத்தரபிரதேச மாநிலத்தில் நான் போட்டியிட்டாலும் எனக்கு நிறைய ஆதரவு கிடைக்கும். ஏனென்றால் நான் ஏராளமான போஜ்புரி மொழிப்படங்களிலும் நடித்து இருக்கிறேன். இந்த மொழிபேசும் வடக்கு உத்தரபிரதேச பகுதிகளில் எனக்கு பெரும் ரசிகர் வட்டாரம் உண்டு.
2004-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலேயே நான் போட்டியிடுவதற்கு மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன். ஆனால் அப்போது நிறைய படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்ததால் அது நடக்கவில்லை. இதனால் அப்போது காங்கிரசுக்காக நாடு முழுவதும் பிரசாரம் செய்தேன்.
தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தால் கல்வி, பெண்கள் பிரச்சனை மற்றும் தொகுதி மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்.
நாட்டின் மதச்சார்பின்மைக்கு அடையாள சின்னமாக நானே ஒரு சிறந்த உதாரணமாக திகழ்கிறேன். எனது குடும்பத்திலேயே மதச்சார்பின்மை உள்ளது. ஏனென்றால் எனது தந்தை ஒரு பிராமணர். தாயாரோ முஸ்லிம் பெண். மதச்சார்பின்மை என்பது நாட்டின் முழுமைபெற்ற கொள்கையாக இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம்’’ என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment