Please Visite here - www.cenimagallary.blogspot.com

Sunday, March 8, 2009

தேதி மாற்றம் தேர்தலிலா? 20-20 கிரிக்கெட் ஆட்டத்திலா : லலித் மோடி

நாடு எப்படி போனால் என்ன பணம் பண்ணவேண்டும் (ஐ.பி.எல்) 20-20 மேட்சை எப்படியும் நடத்துவோம்-லலித் மோடி : கிரிக்கெட்டின் புதிய அவதாரமான 20-20 மேட்ச், டெஸ்ட் மேட்சில் பணம் பார்த்தாகி விட்டது. மக்களுக்கு அலுத்து போகாமல் இருக்க ஒரு நாள் மேட்சிலும் பணம் பார்த்தாகிவிட்டது. இனி என்ன 20-20 கடந்த வருடம் இந்த 20-20 மேட்சிற்கு கிடைத்த பணமழை இந்திய தொழில் அதிபர்களை மீளமுடியாத போதையில் ஆழ்த்தி விட்டது. பண மழை கொட்டும் இந்த ஐ.பி.எல்-லில் இணைந்து கொள்ள பல நிறுவனங்கள் போட்டா போட்டி.



Image

இதில் முக்கியமாக விளம்பர நிறுவனங்களும், தொலைக்காட்சி நிறுவனங்களும் தங்களுக்குள் காதல் கொண்டன. சோனி டிவியும், வோல்ர்ட் ஸாபோர்ஸ் குரூப்பும் இணைந்து 10 ஆண்டுகால ஒளிபரப்பு உரிமையை பெற்றுள்ளது. மைதான சார்பு உரிமையை ரிலைன்ஸ் கம்யுனிகேசன் பிக் டி.டி.ஹச் தனியாக வாங்கியுள்ளது. போட்டியை ஒளிபரப்புவதற்காக ஏர்டெல் நிறுவனத்துடன் சோனி தனியாக ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஐ.பி.எல் மூலம் ஆண்டுக்கு மொத்த வருமானம் இரண்டாயிரம் கோடிகள் திரளும். இது கூடவும் செய்யலாம் குறையவும் செய்யலாம். தொலைகாட்சி விளம்பரங்களின் மூலம் ரூ.700 கோடி திரளும். மைதான விளம்பரங்கள் மூலம் ரூ.160 கோடிகள், போட்டிகளில் வரும் விளம்பரங்கள் 10 வினாடிகளுக்கு ரூ.5 லட்சம் என ஆரம்பித்து போட்டிகள் நடக்கும்போது 20 லட்சம்வரை உயர உள்ளது. இப்படி உலகத்திலேயே பெரிய கல்லாப்பெட்டியை திறந்து வைத்திருக்கும் பவார் அன் கம்பெனிக்கு பெரிய அதிர்ச்சி.



பாகிஸ்தானில் இலங்கை அணி தாக்கபட்டதும், உலகம் முழுவதும் வீரர்களுக்கான பாதுகாப்பு குறித்த விவாதம். உடனே உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தேர்தல் நேரத்தில் வீரர்களுக்கான பாதுகாப்பு என்பது முடியாத காரியம் அதனால் ஐ.பி.எல் போட்டி நடக்கும் தேதியை மாற்றுங்கள் என்று ஆணையிட்டதுதான் இதற்கு காரணம். ஆனால் லலித் மோடியோ தேர்தல் தேதியை மாற்றுங்கள் என்று சொல்வதுபோல் அதெல்லாம் முடியாது, ஐ.பி.எல் மேட்சுகளில் சில மாற்றங்கள் வேண்டும் என்றால் செய்கிறோம் என சொல்லி விட்டார். உள்துறை மந்திரியுடன் நடந்த பேச்சுவார்த்தையில் போட்டிகள் நடக்கும் மாநிலங்களின் நிலையை கேட்டு விட்டு மேலே பேசலாம் என்றார். உடனே மாநிலங்களில் உள்ள பெரிய தலைகளுக்கு பெட்டிகள் கொடுத்து நொ அப்செக்ஸன் சர்ட்டிபிகேட் வாங்கும் நடவடிக்கையில் இறங்கி விட்டனர். நல்லவேளையாக சிதம்பரம் உள்த்துறை மந்திரியாக இருக்கிறார். சரத் பவார் இருந்தாலோ தேர்தல் தேதியே மாறி இருக்கும்!

No comments:

Post a Comment