Please Visite here - www.cenimagallary.blogspot.com

Wednesday, March 4, 2009

தரக்குறைவாக பேசி அடிக்கப்பாய்ந்தார்:இயக்குநர் மீது நடிகை புகார்



ஜெயம்ரவி நடிக்கும் பேராண்மை படத்தை இயற்கை, ஈ படங்களை இயக்கிய ஜனநாதன் இயக்கிவருகிறார்.இப்படத்தில் வட்டாரம், ஜெயம்கொண்டான் படங்களில் நடித்த வசுந்தரா முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இயக்குநர் ஜனநாதன் மீது நடிகை வசுந்தரா நடிகர் சங்கத்தில் புகார் செய்துள்ளார்.

அப்புகாரில், ‘பேராண்மை படப்பிடிப்பு ஏற்கனவே தலக்கோணத்தில் நடந்தது. இரவில் கொசுக்கடி அதிகம் இருந்ததால் நடிகர் நடிகைகளும் தொழில்நுட்ப கலைஞர்களும் பெரும் அவதிப்பட்டனர். எனக்கு காய்ச்சல் வந்தது. திருப்பதி வந்து ஆஸ் பத்திரியில் சிகிச்சை எடுத்துக்கொண்டேன்.

சிலநாட்கள் இடைவெளிக்கு பின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பையும் தலக்கோணத்திலேயே நடத்த ஜனநாதன் முடிவு செய்தார். படப்பிடிப்பு குழுவினர் அங்கு சென்று முகாமிட்டனர்.

ஆனால் நான் கொசுக்கடிக்கு பயந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருப்பதியில் இரவு தங்கினேன். ஜெயம்ரவி உள்ளிட்ட இதர நடிகர் நடிகைகளும் திருப்பதியிலேயே தங்கினர்.

மறு நாள் காலை காரில் புறப்பட்டு தலக்கோணம் சென்று படப்பிடிப்பில் பங்கேற்றனர். படப்பிடிப்பு முடிந்து இரவு திருப்பதியில் தங்குவதற்காக புறப்பட தயாரானேன்.

இயக்குநர் ஜனநாதன் இதற்கு சம்மதிக்க வில்லை. தலக்கோணத்தில் தான் இரவு தங்க வேண்டும் என்றார்.எனது மேக்கப் லக்கேஜும் அவரிடம் ஒப்படைக்கப்படாமல் ஒளித்து வைக்கப்பட்டது.

இதனால் பலமணி நேரம் காட்டில் கொசுக்கடியில் தூங்காமல் அவதிப்பட்டார். அவருக்கும் எனக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது.

மற்ற நடிகர்கள் திருப்பதியில் தங்கி காலையில் வருவது போல் நானும் வருகிறேன் என்று கெஞ்சினேன். அதை ஏற்காததால் படப்பிடிப்பை புறக்கணித்து திருப்பதி சென்றேன் இதையடுத்து படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் சென்னை புறப்பட்டு வந்து விட்டேன்’ என்று தெரிவித்துள்ளார்.

தற்போது வசுந்தராவிடம் சமரசபேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

No comments:

Post a Comment