Please Visite here - www.cenimagallary.blogspot.com

Sunday, March 8, 2009

காதலன் வீட்டு முன் விஷம் குடித்து கர்ப்பிணி பெண் தற்கொலை முயற்சி

மன்னார்குடி அருகே திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய காதலன் வீட்டு முன் கர்ப்பிணி பெண் ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். மயக்கமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மன்னார்குடி அருகே காதலித்து கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டு முன்பு காதலி விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

மன்னார்குடி அருகே உள்ளது அதிராம்பட்டினம். இந்த ஊரைச் சேர்ந்தவர் காளிதாஸ் என்பவரது மகள் சித்ரா (24). இவர் மன்னார்குடியில் உள்ள தனது அக்கா காயத்திரி வீட்டிற்கு அடிக்கடி செல்வது வழக்கம்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சம்பத் (30) என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் பல்வேறு சுற்றுலா இடங்களுக்கு சென்றுள்ளனர். மேலும் பல இடங்களில் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் சித்ரா கர்ப்பம் அடைந்துள்ளார்.

இந்த விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது. இதையடுத்து ஊர் பஞ்சாயத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சித்ராவுக்கும், சம்பத்திற்கும் தை மாதம் திருமணம் நடத்துவது என முடிவு செய்தனர்.

அதன்படி தை மாதம் பிறந்த உடன் சித்ரா பெற்றோர்கள் சம்பத் வீட்டிற்கு சென்று திருமண ஏற்பாடுகள் குறித்து பேச முயற்சி செய்துள்ளனர். ஆனால், சம்பத் மற்றும் அவரது பெற்றோர்கள் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த சித்ரா தனது காதலன் சம்பத் வீட்டு முன்பு விஷம் குடித்து, தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

தலைசுற்றி கீழே விழுந்த அவரை அப்பகுதி மக்கள் சிலர் சித்ராவை மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்த சம்பவம் தொடர்பாக மன்னார்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment