இளைஞர்களான பின்னும் நம் குழ்ந்தைகள்தானே என்று பெற்றோர்கள் அலட்சியமாக இருப்பது தவறு! குழந்தைகளை வளர்க்கும்போது நாம் சிறந்தவர்களாக விளங்க வேண்டும் என்றே விரும்புகிறோம். நாம் செய்யும் தவறுகளைப்பார்ப்போம்!
1.குழந்தைகளிடம் கத்துவது,சத்தம் போடுதல்:
இது நமது இயலாமயால் நமது கோபத்தினை வெளிப்படுத்தும் செயல்.
விளைவு:பிள்ளைகள் பெற்றோரை எதிரியாக நினைப்பர்.
செய்யவேண்டியது: கோபம் தணியும் வரை அமைதியாக இருப்பது! பின்பு அமைதியாக வேண்டுதல் அல்லது அழுத்தமாக வலியுறுத்தல்!
2.உடனே செய்!:
பெரும்பான்மை பிள்ளைகள் உடனே செய் என்று கட்டளையை அவமானமாகக் கருதுவர்!
விளைவு: வேலையை செய்யாமல் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி அமைதியா இருந்து கழுத்தைஅறுத்து விடுவார்கள்.
செய்யவேண்டியது:அன்பாகவும் பாராட்டும் விதமாகவும் சொல்லி வேலை வாங்குவது!!
3.தவறு காணுதல்
,திரும்பத்திரும்ப வலியுறுத்திக்கொண்டே இருப்பது:
விளைவு:இது பிள்ளைகளுக்கு எரிச்சலை உண்டாக்கும்.
செய்யவேண்டியது; அடுத்த அறையிலிருந்து கத்துவதைவிட பக்கத்தில் வந்து உடனே சாப்பிட்டால்தான் டி.வி.பார்க்கவிடுவேன் என்று அன்பாக வலியுறுத்தல்.
4.விளக்கங்களும்,புத்திமதி சொல்லுதலும்: ஒருவர் மட்டுமே பேசுவதை யாரும் விரும்புவது இல்லை!
விளைவு: வேலை நடக்காது.
செய்யவேண்டியது:குழந்தைகளிடமே கேப்பது! ஏன் மார்க் குறைந்தது! இந்த கணக்கு புரியலியா? வா நான் சொல்லிதருகிறேன். சரியாக பிரச்சினை எந்த இடத்தில் என்று கண்டுபிடித்துவிடலாம்.
5.கடுமையான கோபம்!: வந்தால் காட்ட வேண்டாம்.குழந்தைகள் மனம் உடைந்து போகலாம்.(எடு): நீ ஏண்டா உயிரோட திரியுறே!!
செய்யவேண்டியது:கோபம் அதிகமானால் ஒரு வாக்கிங் கிளம்பலாம்,ஜிம் போகலாம்.
6.எதிர்மறையாக குற்றம் சொல்லுதல்: உருப்படமாட்டே நீ, இந்தச் சின்ன விசயம் கூட உனக்கு தெரியலிய்ர்?
விளைவு: தான் திறமையில்லாதவன் என்ற தாழ்வு மனப்பான்மை!
செய்யவேண்டியது:நேர்மறையாக ஊக்கப்படுத்துதல்!
7.கையும் களவுமாகப் பிடித்தல்: குழந்தைகள் தவறை மறைக்கவும்,பொய் சொல்லவும் ஏதுவாகும்..
செய்யவேண்டியது:நேரடியாக பேசுதல்,நம்பிக்கயூட்டும் விததில் நடந்துகொள்ளுதல்.
8.அதிகமாக குற்றம் சுமத்துதல்:ஏதும் இயலாத நமது செய்கைகளுக்கு பிள்ளைகளைக் குறைகூறுதல்!! “இவன் மட்டும் சரியான நேரத்தில் வந்து இருந்தால் எனக்கு இவ்வளவு பிரச்சினை நஷ்டம் ஏற்பட்டு இருக்காது. “
செய்யவேண்டியது:ஆதரவாக பேசுவது! ”அவனுக்கு என் மேல் அன்பு அதிகந்தான். ஏதோ சூழ்நிலை இப்படியாகிவிட்டது!”
9. அடித்தல்: சுய கட்டுப்பாடு,சுயஒழுக்கம் கற்பித்தலே சிறந்தது! அடிப்பது குழந்தைகளிடம் நமக்குள்ள மரியாதை ஆகியவற்றைக் கெடுக்கும்.
விளைவு:எதிரி மனப்பான்மை, பெற்றோர் பிள்ளை உறவில் விரிசல்.
செய்யவேண்டியது:தொடர்ந்து குழந்தைகளை அடிப்பவரா நீங்கள்? அதிகம் குழந்தைகளிடம் வயசுக்கு மீறி எதிர்பார்க்காதீர்கள். நிறைய புத்தகங்கள், நிகழ்ச்சிகள் மூலம் குழந்தைகளின் மனநிலையைப்புரிந்து கொள்ளங்கள்!
10.வலுக்கட்டாயப் படுத்துதல்: குழந்தைக்கு டாக்டரிடம் பயம் என்றால் இழுத்துக்கொண்டு உள்ளே சேர்ப்பது தவறு.
விளைவு:குழந்தை அழுது கதறி ஊரைக்கூட்டுவான்.
செய்யவேண்டியது: ”பயப்படாதே! என் கையை பிடித்துக்கொள்! நானும் உன்னைப் பிடித்துக்கொள்கிறேன். அப்பா கூட இருக்கிறேன்” சரியா போன்ற ஆறுதல்!
சொல்லவேண்டியது இவ்வளவுதான்! நாம்தான் கடைப்பிடிக்கணும்!
No comments:
Post a Comment