Please Visite here - www.cenimagallary.blogspot.com

Friday, March 20, 2009

காதல் கல்யாணம்: நடிகர் ஜெயம் ரவி பேட்டி

அமுல் பேபின்னு பெண்கள் கொண்டாடும் ஹீரோ ஜெயம் ரவிக்கு கல்யாணம்னு கேள்விப்பட்டோம். பேராண்மை படத்தின் ஷூட்டிங்கில் இருந்த அவரை சந்தித்தோம்.


உங்க வளர்ச்சியை எப்படி திட்டமிடுகிறீர்கள்?



ஜெயம்,எம். குமரன் சன் ஆப் மாகலட்சுமி, தாஸ், மழை, இதய திருடன், உனக்கும் எனக்கும், தீபாவளி, சந்தோஷ் சுப்ரமணியம், தாம்தூம்னு நடிச்சுட்டேன்.
சினிமா எனக்கு கனவல்ல. வீட்டில் தினம் தினம் அதோடு வாழ்ந்ததால ரொம்ப நெருக்கமா நுழைஞ்சிட்டேன் . அப்பாவும் , அண்ணனும் எனக்கு எந்த பளுவும் வைக்காமல் அவர்களே பாதி பாரத்தை எடுத்துக்கிடங்க.
மிதியை என்னால் ஈசியா சுமக்க முடிந்தது. நான் எப்போழுது ரொம்ப மெனக்கிடறது கிடையாது. எப்பவும் போல அண்ணனும் ,அப்பாவும் இருக்கிறதால நான் ஜாலியா நடிச்சிகிட்டு இருக்குறேன் . பாதை அவர்களுடையது , பயணம் என்னுடையது.



நிறைய ஹிட் கொடுத்தும் உங்ககிட்ட ஆர்பாட்டம் இல்லையே?


சினிமாவுல அன்னன்னிக்கு ஜெய்க்கிறது ரொம்ப முக்கியம். வெற்றிக்கு முடிவு கிடையாது. இங்க நேத்து ஜெயிச்சன்னு சொல்ல முடியாது .இன்னைக்கு ஜெயிக்கனும் ,நாளைக்கு ஜெயிக்கனும் அப்பதான் மரியாதை.
ஒரு படம் ஹிட் கொடுத்துட்டு ஆர்ப்பாட்டம் பண்ணிட்டா அடுத்த படம் பெரிய ஹிட் கொடுக்காட்டி முந்தன வெற்றிக்கு மரியாதை இல்லாமல் போய் விடும். அதனால வெற்றிக்காண உழைப்பைத் தவிர வெறெதையும் நான் செய்றதில்ல....



பேராண்மை என்ன பண்ணியிருக்கீங்க?


வனத்துறை அதிகாரி. உண்மையான வனத்துறை அதிகாரியாக முயற்சி செய்து இருக்கிறேன். அந்த கேரெட்டருக்கு எந்த ரெஃபெரென்சும் கிடையாது. முழுக்க முழுக்க என்னையும் ஜனா சாரையும் நம்பி எடுத்தப்படம்.
நிறைய புது விஷயத்தை ட்ரை பண்ணி இருக்கிறோம். எல்லாம் படத்திலயும் காடு ஒரு லொக்கேஷனலாக இருக்கும்.ஆனால் இந்த படத்தில் காடு ஒரு கேரக்டாவே வரும். உடம்பு , அறிவு மற்றும் சூழ்நிலை எல்லா நிலையிலும் கஷ்டபட்டு நடிச்ச படம் பேராண்மை.

95 சதவிதம் அவுட்டோர் . ஆனால் எங்கையாவது ஏர்போர்ட்டில் நின்னால் கூட என்னை யார் என்று கேட்கும் ஆளவுக்கு மாத்தின படம். ஏறக்குறைய ஒரு வருசம் காட்டுக்குள்ளையே வாழ்ந்து இருக்கேன்.
13 கிலோ எடை குறைச்சு காட்டுக்குள்ளையே டெண்டு அடிச்சி ஜிம் போட்டு உடற்பயிற்ச்சி பண்ணிட்டே இருப்பேன். உழைப்புக்கு ஏத்த பலன் என்னைக்கு உண்டு .ரொம்ப நல்ல வந்து இருக்கு. அதற்கு காரனம் நான் மட்டும் இல்ல மொத்த யூனிட்டு தான். வெறித்தனமா உழைச்சி இருக்காங்க. ஜனா சார் சொல்லவே வேண்டாம்!கண்டிப்பா வெற்றி படமா அமையும். அமையனும். ஏன்னா இது நிறைய பேருடைய வெறித்தனமான உழைப்பு.


உங்க கூட நடிச்ச எல்லா ஹுரோயினும் உச்சத்துக்கு போயிட்டாங்க. ரவியோட ராசியா?


நல்லா கவனிச்சா என்னோட படம் எல்லாம் ,குடும்பத்தோடுப் பார்க்குற மாதிரிதான் இருக்கும்.குடும்பத்தோடுப் பார்க்குற எல்லா படமும் ஹுரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற படமா இருக்கும்.
ஒரு படம் முழுமையடைய ஹுரோ, ஹுரோயின் இருவருக்கும் முக்கியத்துவம் இருக்க வேண்டும். அப்படித்தான் என்னோட நடிச்ச அசின் , ஸ்ரேயா, பாவனா, ஜெனிலியா டாப்புக்கு போயிட்டாங்க. ஒரு வேளை என்னோட நடிச்ச ராசின்னு சொன்னா சந்தோஷம் தான்.



சரி, ரீல் ஹுரோயின்களை விடுங்க.ரியல் ஹுரோயினுக்கு வாங்க?


ஒரு சிலரை நாம் அடிக்கடி சந்திச்சியிருப்போம்.ஆனா இவங்க தான் வாழ்க்கையில வரபோறங்கனு தெரியாது.அது மாதிரி தான் ஆர்த்தியும்.இவங்க குடும்பமும் எங்க குடும்பமும் அடிக்கடி சந்திக்கிற சந்தர்பங்கள் உண்டு. அப்போ இவங்களை பார்த்து இருக்கிறேன்.ஆனா கல்யாணத்தைப் பற்றி எந்த ஜடியாவும் இல்லாத சமயத்தில் . இரண்டு குடும்பமும் எடுத்த முடிவின்படி ஆர்த்தி எங்க வீட்டு மருமகளா வரப்போறாங்க.எந்த விஷயமும் அப்பா , அண்ணனை மீறி செய்ததில்லை.இந்த முக்கிய விஷயமும் அவர்கள் விருப்பபடி அமைவது எனக்கு மகிழ்ச்சி. கல்யாண தேதி மற்றும் மற்ற விஷயத்தை அப்பா கூறுவார் என்று எடிட்டர் மோகனை கை காட்டினார். எடிட்டர் மோகன்


’’இது இரண்டு குடும்பமும் எடுத்த முடிவு. நாங்களாக அறிவிக்கும் முன்பு சில விஷ்யம் பரபரபாக பத்திரிக்கையில் வெளிவந்துவிட்டது. எல்லாம் நல்லதுக்குதான். காதல் திருமணம் என்றால் ஆம் என்று சொல்வதில் எங்களுக்கு ஆட்சபனை இல்லை. ஆனால் இது இரண்டு குடும்பமும் எடுத்த முடிவு.


ஜுன் 7ந் தேதி ரவிக்கு திருமண தேதியாக கூறித்து இருக்கிறோம்.மேயர் ராமநாதன் செட்டியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடக்க இருக்கிறது. மணப்பெண் பெயர் ஆர்த்தி விஜய்குமார். சின்னத்திரை மற்றும் சினிமா தயாரிப்பாளர்கள் திரு.விஜய்குமார், திருமதி சுஜாதா விஜய்குமார் அவர்களின் புதல்வி ஆர்த்தி பி சி ஏ முடித்த பின்பு மாச்டெர் ஒஃப் இண்டெர்எஷ்னல் முடித்திருக்கிறார்.



ஜுன் 7ந் தேதி நடக்கும் திருமணத்திற்கு எல்லா அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா குடும்பத்தை சோர்ந்த எல்லோரையும் அழைக்க உள்ளோம் என்று எடிட்டர் மோகன்’’ தெரிவித்தார்.

No comments:

Post a Comment